Sep 12, 2011

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை - டி.அருள் எழிலன்-
எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து.பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.


பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில், நேற்று காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.


தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.


பரமக்குடி தலித் படுகொலைகள்

* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம் வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல் போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான்.

* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது. தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து. பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில், நேற்று காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர்.


அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
சில கருத்துக்கள
..............................


* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம் வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல் போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான்.

* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது. தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல தளங்களிலும் விரிவு படுத்தப்பட்டது. இதுவே பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அரசு நிர்வாகத்தில், போலீசில் நீதி கேட்கவோ, பாதிப்புக்கு நியாயம் கேட்கவோ முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.

*தமிழ் தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் குழுக்களுக்குமான முரண் என்பது அவர்கள் தென் மாநிலங்களில் அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைத்துக் கொள்கிறார்கள். தமிழனை தமிழனே ஆளட்டும் வந்தேரிகள் எல்லாம் ஓடட்டும் என்பதுதான் தமிழ் குழுக்களின் அணுகுமுறை. தமிழர்களின் மலங்களை காலம் காலமாக தங்கள் தலையில் தூக்கிச் சுமந்த அருந்ததிய மக்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி திராவிட இயக்கத்தின் தலைமை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் அதிகாரமாக உள்ளதோ அது போன்றே தமிழ் தேசியக் குழுக்களும், இதை தலித்துக்கள் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். இவர்கள் ஈழம், தமிழ் மொழி, என்று போராடுகிறார்களே தவிற தமிழர்களின் வேறு எந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதும் இல்லை குரல் கொடுப்பதும் இல்லை. முருகன்,சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மட்டுமல்ல அப்சல்குரு, கஸாப், உள்ளிட்ட அனைவருக்காகவும் குரல் கொடுப்பதோடு இந்தியாவிலிருந்தே மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் முற்போக்கு மனித உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கை. பாராளுமன்றத் தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்ட பேரா.கீலானி வேலூருக்கு வந்து மூவரையும் சந்தித்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் அப்சல் குரு குறித்தோ, கஸாப் குறித்தோ மறந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசி விட மாட்டார்கள். காரணம் இந்து முன்னணி கும்பலையும் அர்ஜூன்சம்பந்த் போன்ற இந்துப் பாசிஸ்டுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடுமே என்ற அச்சம். பெரியார் திக, தோழர் தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்ட வெகு சில அமைப்புத் தலைவர்களைத் தவிற பெரும்பலான தமிழ் தேசியவாதிகள் தலித் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதுமே பேசியதில்லை. நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டால் எங்களை ஏன் கேட்கின்றீர்கள் கொன்றவனைப் போய் கேளுங்கள் என்கிறார்கள்.

* திராவிட இயக்கத்திற்கும் தமிழ் தேசிய இயக்கத்திற்குமான வேறு பாடு என்பது துளியளவுதான். அதிகாரத்தில் இருக்கும் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்திற்கு நெருக்கமான அதிமுகவாக இருந்தாலும், பச்சைத் தமிழ் திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய திமுகவாக இருந்தாலும் இவர்களின் அதிகாரத்தால் பலன் அடைவது பார்ப்பனர் அல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும்தான். திராவிட இயக்கத்திற்கென குறைந்த பட்ச சமூக சீர்திருத்த கோட்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்கு அது கூட இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தால் அதிகாரம் பெற்று அரசு நிர்வாகத்தில் வீங்கிச் செல்லும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக தேவர் சாதி அரசியலே தமிழ் தேசியத்தையும் வழி நடத்துகிறது. இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும் அவர் தார்மீக நெறிகளுக்கு அப்பால் நூறு தள்ளி நிற்கிறேன். 200 அடி தள்ளி நிற்கிறேன் நாம் இணைந்து ஈழ மக்களுக்காக உழைக்கலாம் என்று தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதும் தமிழ் தேசியவாதிகள் திருமாவை ஒதுக்கி வைப்பதையும் காண முடிகிறது. மௌனம் என்பது எவளவு பெரிய வன்முறை என்பதை தமிழ் தேசிய குழுக்களின் அணுகுமுறைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

* தலித்துக்கள் மீதான இந்த மரணதண்டனையை, இனப்படுகொலையை எவன் ஒருவன் கண்டிக்கத் தயங்குகிறானோ அப்போதே அவன் பயங்கரவாத இலங்கை அரசை கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறான். மூவருக்கும் மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லுகிற ஒருவன் தலித்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விரோத மரணதண்டனைக்கு எதிராகவும் பேசத் தவறுகிறான் என்றால் அவன் பகுத்தறிவுக்கு புறம்பானவனாக போலி முற்போக்காளனாக வாழ்கிறான் என்று பொருள்.

* மாணவர் பழனிக்குமாரை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தலித்துக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள், உத்தரவிட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக தென் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார், போலீஸ் அதிகாரிகள் சொந்த ஊரில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு அவர்களை சென்னை போன்ற நகரங்களில் பணியமர்த்துவதோடு, கலவரக் காலங்களில் வெளி மாநில போலீசாரைக் கொண்டு பதட்டச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். பெரும்பலான காவல்துறை அதிகாரிகள், போலிசார் தேவர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பல் வேறு உண்மையறியும் குழுவின் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தேவர் சாதி போலீசுக்கு மிக முக்கிய பங்கிருப்பதையும் நாம் கொடியங்குளத்தில் தொடங்கி தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலை வரை புரிந்து கொள்ள முடியும். தலித்துக்களுக்கு போலீஸ், அரசு நிர்வாகத்தில் உரிய பங்கீடுகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சாதியை போலீஸ் துறையில் கட்டுப்படுத்தும் படி சட்டம் இயற்றப்பட வேண்டும்.

* தேவர் சாதித் தலைவர் என்று சொல்லக்கூடிய முத்துராமலிங்கம் என்பவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல தலித் மக்களின் தலைவரான இமானுமேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது முத்து ராமலிங்கத்தின் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்.
* படித்தவர்கள் எல்லாம் சாதி பார்க்க மாட்டார்கள் என்ற தமிழனின் பொதுப்புத்தி இன்று உடைந்திருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளார்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த சாதியை மீற முடியாதவர்களாக இருக்கும் நிலையோடு அவர்கள் காக்கும் மௌனமும் இங்கே குறிப்பிடத்தக்கது.சொந்த சாதியை மறுத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்க்காக போராடும் பார்ப்பன நண்பர்களையும், தேவர் சாதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி நண்பர்களையும் நாம் பாராட்டுகிறோம். பல பத்தாண்டுகளின் பின்னர் இருண்ட மேகமாய் தலித் மக்கள் மீது பாய்ந்துள்ள தமிழக சாதி வெறி போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்போம்.


நன்றி: டி.அருள் எழிலன்

Jul 26, 2011

ஐரோப்பிய நாடுகளில் மதத் தீவிரவாதம்: நார்வேப் படுகொலைகள் - பவானி

ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ தீவிரவாதம் ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கிறித்தவ தீவிரவாத, வெள்ளை இளைஞன் ஒருவனால் நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு படுகொலைச் சம்பவம் "அமைதி மிக்க நாடாகத் தம்மை "அடையாளம் காட்டிக் கொள்ளும் இந்த நாட்டில் வாழும் பிற இன, நிற, மத மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொலை நடந்து கொண்டிருந்த அதே வேளையிலும், செய்தி முழுமையாக வெளிவராதும் இருந்த நேரத்தில் இஸ்லாமிய இயக்கங்களைச் சந்தேகத்திற்குள்ளாக்கி பி.பி.சி, ஸ்கை உள்ளிட்ட டி.வி. நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. கொலையில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தான் என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அனைவரும் திகைப்படையும் வண்ணம் இந்தக் கொலைகளைச் செய்தது ஒரு வெள்ளையர், அதுவும் நார்வே நாட்டைச் சேர்ந்தவன் என்ற செய்தி வெளி வந்தவுடன் பொது விவாதங்கள் இறந்தவர்களுக்கு இரங்கற்பா பாடும் நோக்கில் திசை திரும்பியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைச் சாடும் ஒருவரும் ஐரோப்பியர்களின் இந்த வெள்ளையின கிறித்தவத் தீவிரவாதத்தை சாடுவதாகக் காணோம்.


நார்வே படுகொலைகள்

நார்வே நாட்டில் வெள்ளையின மேலாதிக்கத்தையும் இன்று இயங்கும் தீவிரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினராகக் கருதப்படும் ஆண்டர்ஸ் பெரிங் பெர்விக் (Anders Behring Breivik) ) என்ற இளைஞன் தொண்ணூறு பேரை துப்பாகியால் சுட்டும் வெடிகுண்டு வைத்தும் படுகொலை செய்திருக்கிறான். கொலை செய்யப் பட்டவர்கள் அனைவரும் நார்வே தொழிற்கட்சியின் இளைஞர் அணியினர். தொழிற்கட்சி ஒரு சமுக ஜனநாயகக் கட்சி. அதன் இளைஞர் அணியினரை பெருவாரியாகப் படுகொலை செய்ததற்கு அவன் சொன்ன காரணம்: “இந்த இளைஞர்கள் உருப்படியான வெள்ளையர்களும் இல்லை, கிறித்தவர்களும் இல்லை, இவர்களெல்லாம் இருப்பதைவிட இறப்பதே மேல்”. இத்தகைய மத இன வெறியின் ஊற்றுமூலம் ஐரோப்பாவின் கடந்த கால வரலாற்றில் அடங்கியிருக்கிறதுஐரோப்பிய இனவெறியும் !! வெள்ளை நிறவெறியும் !!

ஐரோப்பியர்களின் பழைய வரலாற்றையும், தற்கால நடைமுறைகளையும் அறியாதவர்களுக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு அதிர்ச்சி தரக் கூடிய விஷயம். ஆனால், இங்கே ஐரோப்பாவில் பெர்விக் போன்ற நபர்கள் நிறையவே இருக்கின்றனர். அவரைப் போன்றவர்கள் செயல்படும் இயக்கங்கள் பல வெளிப்படையாகவே இயங்குகின்றன. இந்த இயக்கங்கள் கிறித்தவப் புகழ்பாடும் மத்திய காலச் சிலுவைப் போர்களிலிருந்தும், ஐரோப்பிய மேட்டிமையின் தொடக்கமான காலனியாதிக்க மேலாண்மையிலிருந்தும், சமீபத்தில் வாழ்ந்த ஹிட்லர் போன்ற நாஜிகள், பாசிஸ்டுகளின் போதனைகளிளிருந்தும் தமது உற்சாகத்தை பெறுகின்றன. ஐரோப்பாவில் நிலவும் புரட்சிகர அரசியல் வெற்றிடத்தில் இந்த இயக்கங்கள் வளர்கின்றன. அதிதீவிரப் பிரிட்டிஷ் வெள்ளையினத் தீவிரவாத இயக்கமான ஆங்கிலேயப் பாதுகாப்புக் கழகம் (English Defence League), ஐரோப்பிய இஸ்லாமிய எதிர்ப்புச் சங்கம் (Stop the Islamification of Europe (SIOE), போன்றவை அகில ஐரோப்பாவிலும் வெள்ளையின மேட்டிமையை உயர்த்திப் பிடிக்கும் அதிதீவிர இயக்கங்களில் மிகவும் முக்கியமானவை. அதன் மூளையாக இயங்குபவை. இதன் முக்கியக் கோரிக்கைகள் கிறித்தவத்தின் உயர்வு, வெள்ளையின உயர்வு என்பது மட்டுமே.இந்த இயக்கங்களை நேரடியாகக் கண்டித்து ஒடுக்கும் ஜனநாயக வலுவை ஐரோப்பிய அரசியல் இயக்கங்கள் நவ காலனியமாதலின் தொடக்கமான எண்பதாம் ஆண்டுகளிலேயே இழந்து விட்டன. எடுத்துக்காட்டாக, "ஜனநாயக உணர்வு" மிக்க நாடுகளில் முதன்மையாகக் கருதப்படும் பிரிட்டனில் தேசியக் கட்சி (British National Party) தற்சமயம் ஒரு ஒட்டு வங்கி என்ற நிலையை விட்டு மாறித் தானே தேர்தலில் நின்று பிற கட்சியினரின் வெற்றி தோல்விகளைப் பாதிக்கும் வல்லமை மிக்க ஒரு அரசியல் கட்சி என்ற பெயரைப் பெற்று விட்டது. இதே போலவே, பிற ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறி ஆட்சிக்கு வரும் நிலையில் இருக்கின்றன. ஜனநாயகம், பல்லின அமைதி (Multiracial co-existence) பற்றி உலகிற்குப் போதிக்கும் ஐரோப்பிய தலைவர்கள், அரசியல் இயக்கங்கள், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய சமுக ஜனநாயக கட்சிகள் தங்கள் நாட்டில் நடந்து வருவது பற்றி தெரிந்தே மிகவும் அமைதியுடன் இருந்து வருகிறார்கள். இப்படி ஐரோப்பாவின் பல நாடுகளில் வளர்ந்து வரும் இத்தகைய இயக்கங்கள் ஒரு விதத்தில், தம்மை மார்க்சிய விரோத, கம்யுனிச விரோத, சிறுபான்மை எதிர்ப்பு இயக்கங்கள் என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்து செயல்படுகின்றன. இதனால், பெரிய கட்சிகள் இவற்றை நேரடியாக எதிர்ப்பதில்லை, மாறாக முடிந்த வரை பயன் படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத கட்சிகளாக மாறி விட்டன. பெயரளவுக்கு இன்றைய ஐரோப்பிய அரசுகள் மதச் சார்பற்ற அரசுகள் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் அவைகளும் மதவாத இயக்கங்கள், வெள்ளையினவாதத்தை முன்மொழிந்து செயல்படும் பல இயக்கங்களை ஏதோ ஒருவகையில் ஆதரித்துத் தங்கள் ஓட்டுவங்கியை வளர்த்துக் கொள்ளவே செய்கின்றனர்.ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் பச்சோந்தித்தனம்

கடந்த நூற்றாண்டில் கொடியவன் ஹிட்லர் அத்தகைய வெள்ளை நிற, கிறித்தவ மதத் தீவிரவாதிகளைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தான். அவனைப் பின்தொடர்ந்து இன்றும் பல கட்சிகள் அதைச் செய்து வருகின்றன, ஆனால் வேறுபாடு என்னவென்றால், ஹிட்லர் செய்த அதே வேகம் இன்று சாத்தியம் இல்லை, ஆனாலும் பல நிறவெறிக் குழுக்கள் ஐரோப்பாவின் செல்வாக்கு மிக்க பெரிய கட்சிகளில் உட்பிரிவுகளாக இருக்கின்றன. இத்தகைய பிரிவினர் தற்சமயம் பெரும் அளவில் வளர்ந்தும் வருகின்றனர். ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் இப்படிப்பட்ட இயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. எந்தொரு புரட்சிகர இயக்கங்களுக்கும் அணியோ, செல்வாக்கோ இல்லாத இன்றைய ஐரோப்பாவில், எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் இந்த நிலையை எதிர்க்கும் துணிச்சல் இன்றி ஒரு பச்சோந்தித்தனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை..பெர்விக்

பெர்விக் என்ற இந்தக் கொலைகாரன் நார்வேயின் மேட்டுக்குடியினர் அதுவும் அரசகுடும்பத்தினர் படித்த அதே பள்ளியில் படித்தவன். கூடவே, ஒரு மார்க்சிய எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு போராளி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவன். வெள்ளையினத்தின் மேன்மையில் முழு நம்பிக்கை கொண்டவன். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதங்கள், இனங்களின் ஆதிக்கம் ஐரோப்பாவில் கூடிவிட்டதாகவும் அதில் இருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்கத் தம்மைத் தயாரித்து வருவதாகவும் ஒரு பெரும் கொள்கைப் பிரகடனத்தை (1518 பக்கங்கள்) அவன் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. பெர்விக் தான் ஒரு விவசாயி என்று பதிவு செய்து கொண்டு சுமார் ஒன்பது டன் எடையுள்ள அமோனியம் நயிட்ரேட் உப்பை வாங்கிச் சேர்த்துள்ளான். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த நயிட்ரேட்உப்பு வெள்ளையினத்தவர் என்பதால் தாராளமாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஏராளமான வெடிபொருளைச் இவன் செய்திருக்க முடியும். ஒரே ஒரு கார் குண்டு மூலம் நார்வே நாட்டுப் பிரதமர் அலுவலகத்தை இவன் தகர்த்திருக்கிறான். நாட்டின் பிரதமர் அலுவலகம் என்பது ஒன்றும் சாதாரணமான கட்டிடமாக இருக்க வழியில்லை. இருந்தும் இப்படி ஒரு தாக்குதல் சாத்தியமாகியுள்ளது எப்படி என்பது தெரியவில்லை. மீதம் இருக்கும் குண்டுகள், அவரது கூட்டாளிகள் குறித்து இதுவரை எந்த விவரமும் இது வரை வெளி வரவில்லை. தனிநபராக இருந்து என்பது பேரை துப்பாக்கியால் சுட்டது இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நடந்ததில்லை. இருந்தும் இதுவரை இவன் ஒருவனே தாக்கினான் என்று இங்கே நார்வேயில் செய்திகள் வெளியாகியுள்ளன. பெர்விக் ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் கூட, நார்வே நாட்டுச் சட்டப்படி அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் இருபத்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படும். அவன் பின்னாளில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தலைவராகக் கூட வளர முடியும். இதுதான் இங்கே உள்ள நிலைமை.ஐரோப்பிய வெள்ளையின வெறியின் வரலாறு

காலனிய வாதிகள் கிறித்தவ மதத்தைக் காட்டித்தான் காலனிய ஆட்சியை உலகம் எங்கும் நிறுவினார்கள். அதில் வெற்றிகண்டபின் பல்வேறு வழிகளில் இன்றும் அதனைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் இரண்டு கண்டங்களிலும் பரவிக் குடியிருந்த லட்சக் கணக்கான மக்களைக் கொன்று ஒழிக்க கிறித்தவப் பாதிரிகள் ஐரோப்பியப் படைகளுடன் சமமாக நின்று உதவினர், தங்கள் மதத்தின் மேட்டிமையைக் காட்டி வெள்ளையின அப்படியொரு கொடூர ஆட்சியை நிறுவினர். கிறித்தவ மதத் தீவிரவாதிகள் காலனிய ஆட்சி தொடங்கி இன்று வரை அழித்து ஒழித்த இனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால் அமெரிக்க வரலாற்றை ஒருவர் படித்து அறிய வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி, உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான பேர் வாழ்ந்த பூர்வகுடிகளான மாயர்கள் உள்ளிட்ட இனங்கள் இன்று வெள்ளையின மக்கள் மட்டுமே வாழும் நிலையை ஏற்படுத்தியிருப்பது கிறித்தவ மதத் தீவிரவாதிகளின் சாதனைகளில் ஒன்று. உலகின் வேறு எந்தவொரு மதமும் இத்தகைய ஒரு பேரழிவை மக்கள் மீது நிகழ்த்தியிருப்பதற்குச் சிறிதும் ஆதாரமில்லை. கொலம்பஸ் அன்றைய கிறித்தவப் பேரரசி என்ற பெயர் பெற்ற ஸ்பெயின் நாட்டின் அரசி இசபெல்லாவின் பண உதவியுடன் தன் அழித்து ஒழிப்புப் பணியை நடத்தினான். அவன் பெற்ற கப்பல், பணம் அனைத்தும் ‘இந்தியாவின் பெருஞ்செல்வத்தை தேடிச் செல்லவும், கிறித்தவ மேட்டிமை உலகிற்கு நிருவவுமே அவனுக்கு வசங்கப்பட்டது’. அப்படிப் பெருஞ் செல்வத்தைத் இன்றும் தேடிச்செல்லும் ஐரோப்பிய அரசுகள் அவன் அடியொற்றிச் செல்வதில் வியப்பேதும் இல்லை. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த, சிவப்பு இந்தியர்களைக் கொன்று ஒழிக்க கொலம்பசுக்கு அதிகாரம் வழங்கி ஒத்துழைத்தது கிறித்தவ மதத் தலைமையிடமான வத்திகனும் போப்பும். அமெரிக்காவைப் போலவே, ஆப்ரிக்காவிலும் பல நாடுகளில் கிறித்தவ மதத் தீவிரவாதிகள் காலனிய ஆட்சியாளர்களுடன் இணைந்து முதலில் பலரை அடிமை வாணிகத்திற்காக பிடித்துச் சென்றார்கள். தங்கள் ஆட்சியை ஏற்படுத்த அவர்கள் சொன்ன காரணம்-

கிறித்தவர்கள் உயர்ந்தவர்கள், வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் பிற இனங்கள் அனைத்தும் தாழ்ந்தவர்கள், அந்த இனங்களை திருத்த வேண்டும் என்பதே. கொலம்பஸ் தேர்நெதேடுத்த கொலைகார வழியில் நேரடியாகச் செயல்படாவிட்டலும், இன்றைய ஐரோப்பிய அரசுகள், அரசியல் கட்சிகள், மதவாத இயக்கங்கள் அதே தீவிரவாதத்தை நம்பியே தமது பணிகளைச் செய்து வருகின்றன. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் நார்வே நாட்டில் நடந்த படுகொலைகள் என்றால் அது மிகையல்ல.இப்படிச் வெள்ளையின தீவிரவாதத்தை உற்பத்தி செய்து வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் முக்கியமானவை இன்று புதிதாக பெயர்பெற்றுள்ள ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, ஹாலந்து, போன்ற நாடுகளே. முதல் உலக யுத்தத்திற்கு முன்பு இந்த நாடுகளுக்கு பிற பெயர்கள் இருந்தன. பின்னாளில், மதத் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு தார்மீக அடிப்படையை அமைத்துத் தந்ததில் இவர்கள் முக்கியமானவர்கள். கொன்றது போக, மிஞ்சியவர்களைக் கிறித்தவர்களாக மாற்ற தீயர மத மாற்றம் உள்ளிட்ட பணிகளைச் செய்தவர்களும் இவர்கள்தான். ஏறக்குறைய உலகின் பெரும் பகுதியையே ஒரு அடிமை நிலைக்கு கொண்டு வந்ததும் அவர்களின் மதக் கடமையில் ஒன்று. அத்தகைய பெருமை மிக்க கிறித்தவம் இன்று ஐரோப்பாவில் மீள் உருவம் பெற்று புதிய வகையில் வருகிறது என்பதே பெர்விக் நடத்திய இந்தத் தாக்குதல்.ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தர்ப்பவாதம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பலமான நாடான ஜெர்மனியின் ஆட்சித் தலைவரான ஏஞ்சலா மேற்கல் (Anjela Merkel) ஐரோப்பாவில் பல இன மக்கள் சேர்ந்து வாழும் முறைமை தோல்வியடைந்து விட்டது என்று சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியைத் தள்ளிய ஹிட்லர் இதையேதான் வேறுவார்த்தைகளில் சொன்னான். அவன் தொடங்கிய போரினால், கடும் இழப்புகளையும் சொல்லொணாத் துயராங்களையும் ஜெர்மானியர்கள் அடைந்தார்கள். ஆனால், இன்று தமது சமீப வரலாற்றை மறந்து மீண்டும் இனவெறியின் பாதையில் ஜேர்மனிய அரசியல் கட்சிகள் தமது பயணத்தை தொடங்கியுள்ளனர். அதேபோலவே, பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இனிமேல் பிரிட்டனில் பல்லினக் கலாச்சாரம் (multiculturalism) வெற்றிகரமாக இயங்கும் என்பதைத் தாம் நம்பவில்லை என்று அறிவித்துள்ளார். இப்படி இவர் பல்லினக் கலாச்சாரம் சாத்தியமில்லை என்று சொல்வதன் பொருள் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் கிறித்தவ, வெள்ளையின மேட்டிமை ஒன்றுதான் சரியான வழிமுறை என்பதாகும்.

ஐரோப்பாவின் பல நாடுகள் இனித் தங்கள் நாடுகளில் தமது பழைய காலனி நாடுகளில் இருந்து அரசியல் காரணத்தால் புலம் பெயரும் அகதிகளை உள்ளே விடாத வகையில் சட்டங்களை இயற்றிவருவதுடன், இங்கே இருப்பவர்களையும் வெளியேற்றப் பாடுபட்டுவருகின்றனர். இது இவர்களே அறிவித்துக் கொண்ட தமது சர்வதேசக் கடமையிலிருந்து பின்னோக்கிப் பயணம் செய்வதையே காட்டுகிறது. உதாரணமாக, ஜெர்மனியிலும், பிரிட்டனிலும் இனி அந்நாட்டு மொழிப் பரிட்சையில் தேர்வு பெற்றால் மட்டுமே இனி அகதிகளின் குடியுரிமை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகப் பெரிய ஐரோப்பிய அரசியல் கட்சிகள் எல்லாம் இப்படி வெளிப்படையாக வெள்ளையின மேட்டிமையை மட்டுமே நம்பிக் கட்சி நடத்த வேண்டும் என்ற நிலைக்கு மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக இங்கே சில.ஜெர்மனி

ஜெர்மனியில் ஹிட்லரின் அடிச்சுவட்டில் இயங்கும் பல குழுக்கள் வெளிப்படையாகவே இயங்குகின்றன. வெளிப்படையாக, பாசிசக் கட்சிகள் இயங்க முடியாது என்ற போதும், அவை பிற கட்சிகளின் குழுக்களாகவும், கலை கலாச்சார நிறுவனங்களாகவும், ரவுடிக் கும்பல்களாகவும் இயங்கி வருகின்றன. ஹிட்லரின் நினைவைத் தொடர்ந்து பரப்பி வருவதுடன் ஜெர்மனியர்களை மட்டுமின்றி உலகம் எங்கும் ஒரு வெள்ளையின ஆரிய மேலாட்சிக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.ஆஸ்திரியா

இந்த நாடு முதல் உலகப் போருக்கு முன் பெரும் பேரரசாக விளங்கிய நாடு. ஏறக்குறைய ஐரோப்பாவின் பெரும் பகுதியை தம கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்தப் பேரரசு தொடர்ந்து வந்த இரண்டு உலகப் போர்களில் பல்பிடுங்கப்பட்ட கிழமாக மாற்றப்பட்டது. எனினும், இந்த நாட்டில் மதவாத வெள்ளையின மேலாதிக்கக் கட்சிகள் தொடர்ந்து இயங்கவே செய்கின்றன. அமைதியான நாடுகளில் ஒன்றாக வருணனை செய்யப் படும் இந்த நாட்டில் ஹிட்லரின் புகழ் பாடும் ஜோக் ஹெய்தர் (Jorg Heider) என்பவரின் தலைமையில் அமைந்த சுதந்திரக் கட்சி - Freedom party (FPO) என்று அழைக்கப்படும் மதவாதக் கட்சி சுமார் 27% வாக்குகளைப் பெற்று தற்சமயம் ஆட்சியில் இருக்கிறது. இதன் கொள்கைகளில் முக்கியமானது: வெள்ளையின கிறித்தவ மேட்டிமை, ஐரோப்பாவில் குடியேறும் பிற இனங்களை எதிர்ப்பது என்பதே.பெல்ஜியம்

காட்டுமிராண்டிகளின் தலைமை என்ற ஒரு பதவி இருக்குமானால் அதற்குத் தகுதியுடைய ஐரோப்பிய நாடு இந்த நாட்தின் ஆட்சியாளர்கள் பாதிரிகளுக்கு உண்டு. ஆப்ரிக்காவின் காங்கோ போன்ற வளம் மிக்க நாடுகளை ஆண்ட இந்த ஏகாதிபத்தியம் செய்த படுகொலைகள் எண்ணிலடங்காதவை. பெயரைக் கேட்டாலே அருவருப்பைத் தரும் அளவுக்கு பெல்ஜியம் ஒரு கொடுரமான நாடு. இந்த நாட்டில் ஃபிலமிஷ் கட்சி என்று அழைக்கப்படும் ஒரு இனவாதக் கட்சி ஒரு செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சுமார் பதினைந்து வீதத்திற்கும் அதிகமான இடங்களை பெற்ற செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இது வளரும் வேகத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தாலும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இதுவும் ஏறக்குறைய ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி போன்றதே.நெதர்லாந்து

டச்சு ஏகாதிபத்தியம் என்று அறியப்பட்ட இந்த நாடு இந்தியா, இலங்கை, இந்தோனேசிய போன்ற பல நாடுகளை அடிமைப் படுத்தி ஆண்ட நாடு. ஆப்ரிக்க அடிமை வாணிபத்தில் செல்வம் கொழிக்கபெற்று இன்று உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் இங்கே வெள்ளையின மேலாதிக்கக் கட்சிகள் பெரும் செல்வாக்கு அடைந்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளன. இஸ்லாமியர்களின் வணக்கத்திற்குரிய குர்-ஆன் நூலைத் தொடர்ந்து அவமதித்துப் பேசுவதையே தன் முழு நேரமாகக் கொண்டிருக்கும் கீத் வில்தர் (Geert Wilders) என்பவரின் தலைமையில் அமைந்த சுதந்திரக் கட்சி 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று நாட்டின் பெரும் நகர சபைகளைக் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தத இடமான 150 க்கு 24 இடங்களைக்க் கைப்பற்றியுள்ளது. வெளிப்படையான இஸ்லாமிய எதிர்ப்புத் திட்டங்கள், வெள்ளையின மேட்டிமைத் திட்டங்கள் அறிவித்துச் செயல்படுத்தப்படும் என அந்தக் கட்சி வெளிப்படையாகவே அறிவித்து உள்ளது. இவருக்கு ஐரோப்பா முழுதும் செல்வாக்கு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் பாடம்

இன்றைய ஐரோப்பாவின் பல நாடுகளில் கிறித்தவ மதத் தீவிரவாதிகால் வளர்ந்து வரும் நிலைமை இந்திய நிலைமைக்கு ஒப்பானது. இந்தியாவில் மதவாதக் கட்சியான, பாரதிய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும் முன்பு நடந்த கடைசித் தேர்தலில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆனாலும், இறுதியில் முஸ்லிம் எதிர்ப்பினை மட்டுமே நம்பி வெற்றியடைந்து ஆட்சியையும் பிடித்து விட்டது. "மதச் சார்பற்ற(?) நாடு" எனசொல்லப்பட்ட இந்தியாவில் வெறும் மதவாதத்தை மட்டுமே நம்பி பி.ஜெ.பி போன்ற ஒரு மதவாதக் கட்சி ஆட்சிக்கு வர பிற அரசியல் கட்சிகள் அனைவரும் உடந்தை என்பதை நாம் அறிவோம். இதே நிலை தான் இன்றைய ஐரோப்பாவின் நிலைமை. மதச் சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்ட காங்கிரசு மறைமுகமாக பி.ஜெ.பி க்கு உதவியது. தி.மு.க, தெலுகு தேசம் போன்ற பிராந்தியக் கட்சிகள் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பி.ஜெ.பி. க்கு நேரடியாகவே உதவினர். இன்று அதே நிலைமைதான் ஐரோப்பாவில் இருக்கிறது.உருப்படியான சமூக ஜனநாயகக் கட்சிகளோ, செயல் ஊக்கமுள்ள தொழிற் சங்கங்களோ , புரட்சிகர இயக்கங்களோ இல்லாத இன்றைய ஐரோப்பாவில் மதவாதக்கட்சிகளுக்குத்தான் பிரகாசமான எதிர்காலம் என்பதை ஆஸ்திரியா பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளின் அரசியல் நிலைமை தெளிவாக்குகிறது. இந்த நாடுகளில் உறுதியாக மதவாதக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். நார்வேயின் பெர்விக் போன்ற தீவிரவாத இளைஞர்களின் உதவியுடனும், இதர தீவிரவாத இயக்கங்களுடனும் சேர்ந்து இவர்கள் குஜராத் படுகொலைகள் போன்ற சிறுபான்மையின அழித்து ஒழிபுப் பணிகளை இந்தக் கட்சிகள் நிச்சயம் செய்வார்கள். தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இன, மத, மொழிச் சிறுபான்மையினர் மற்றும் புலம் பெயர்ந்தோர் கணிசமாகப் பரவி வாழும் பல ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட தீவிரவாதிகளின் வளர்ச்சி எல்லவிதச் சிறுபான்மையினரின் இருப்புக்கே அச்சுறுத்தலாகவும் மாறும். அந்த நாள் நெருங்கி வருகிறது என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஐரோப்பிய ஜனநாயக வாதிகளும், அறிவாளிகளும், மார்க்சியவாதிகளும் இந்த நிகழ்வு எதிர் பார்க்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அதற்கு எதிரான ஜனநாயக இயக்கங்களைக் கட்டமைக்க வேண்டும் என்று நம்புகின்றனர்.

Jun 30, 2011

வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதலும் அரசின் மனித உரிமை மீறல்களும்மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் திரு. சதீஷ்குமார், (சமீபத்தில் சட்டப்படிப்பு முடித்தவர்) கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், விரல்கள் தண்டிக்கப்பட்ட நிலை போன்றவை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. துவக்கத்தில் தற்கொலை என்று இதை திசை திருப்ப காவல்துறையினர் முயன்றதும், உடலில் காயங்கள் எதவும் காணப்படவில்லை எனப் பத்திரிக்கையில் அறிவித்த முறையும் சந்தேகத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கான உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும் பிரேத பரிசோதனையை தாமதிக்க காவல்துறையினர் முயன்றதும், அதற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராடிய போது, அதை ஒடுக்கக் கூடுதல் காவலர்களை அழைக்க முற்பட்டதும், இந்த கொலையில் காவல்துறையினரின் கூட்டு சதி இருப்பதற்கான அனைத்து சந்தேகங்களையும் ஆழப்படுத்தியுள்ளது. துவக்கத்தில் இருந்தே காவல்துறையினரின் செயல்பாடு என்பது அலட்சியமான வகையில் இருந்தும், வழக்கறிஞர் சங்ரசுப்பு அவர்கள் இரு ஆய்வாளர் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தெரிவித்த பின்பும், ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் ஆய்வாளர் ரியாசுதீன் மீது எந்த ஒரு விசாரணைக்கான நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்க்கப்பட்டதும் உயர்நீதிமனற ஆட்கொணர்வு மனுவின் மீதான உத்தரவின்படி காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையின்போது அலட்சியமான முநையில் செயல்ப்டடதும் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்ககையின்போது அலட்சியமான முறையில் செயல்ப்டடதும் காவல் துறையினரின் அலட்சிய போக்கையும், சாட்சியங்களை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே நாம் கருத இயலும்.

வழக்கறிஞர் சங்கர சுப்புவை குறிப்பான முறையில் காவல் துறையினர் குறிவைத்து பழி வாங்கும் வகையில் செயல்படுவதன் பின்னணியை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது என்பது அவசியமாகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனித உரிமைக்கான பணியில் முன்னின்று நிற்பதும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பெறும் புரட்சிகர, ஜனநாயக, தேசிய இன , இஸ்லாமிய அமைப்புகளின், முன்னணியாளர்கள் அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் நிலைநாட்ட வழக்கு மன்றங்களில் சமர்புரிந்தவர், வழக்கறிஞர். சங்கர சுப்பு என்பதை இந்த அமைப்புகள் மட்டுமின்றி, அரசு தரப்பினரும் மறுக்க இயலாது.

மனித உரிமையாளர்கள் மீதான தாக்குதல்
தங்க நாற்கர சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் பல கோடி ஊழல் இருப்பதாக பிரதமர் வாஜ்பாயிக்கு மனு அனுப்பி தெரிவித்த சத்தியந்திர துபே என்ற அரசு பொறியாளர் மற்றும் தகவல் உரிமைப் போராள் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இது போன்றே இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய காஷ்மீரின் மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஜலீல் அன்டிராபி இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டு ஜீலம் நதியில் வீசப்பட்டார். ஆந்திராவின் சிவில் உரிமை இயக்கத்தில் முன்னின்று செயல்பட்ட வழக்கறிஞர் புருசோத்தம் அவர்கள் ஆந்திர அரசின் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் மும்பையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமிய மக்களின் மீது பொடா சட்டத்தின் போடப்பட்ட பொய் வழக்குகளை தனது வாதத்திறமையால் முறியடித்து ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்று களத்தில் இறங்கி போராடிய வழக்கறிஞரும், ஜனநாயக உரிமைக்கான பாதுகாப்புக் குழுவின் முன்னணியாளருமான வழக்கறிஞர் ஷாகித் அஸ்மி அவர்கள் மும்பை கூலிப்படையினரால் அவரது அலுவலகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். வெகுசில தினங்கள் முன்பு பெரு நிறுவனங்களுக்கும் நிழல் உலக மாபியா கும்பலுக்குமான தொடர்புகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் தேவ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த பின்னணியில் தான் மனித உரிமை களத்தில் முன்னணியில் இருக்கும் மனித உரிமை போராளிகளை இந்த அரசு கட்டமைப்பு எவ்வாறு இனம் கண்டு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது என்பதை கணக்கில் கொள்ளும்போது வழக்கறிஞர் சங்கர சுப்புவும் இவ்வாறே குறிவைத்து இலக்காக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் யூகிக்க வேண்டியுள்ளது.
வழக்கு அரசுக்கு எதிராக இருக்கும் ஒரே காரணத்திற்காக தனது கட்சிக்காரர் சார்பில் வாதாடும் உரிமையை வழக்கறிஞர்கள் கைவிட நாம் கோர முடியுமா? வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதிட்ட வழக்குகளில் அரசுக்கு எதிராக வாதம் செய்து, சில அரசுத்துறையினர் குற்றவாளியென நிருபிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக நேரிட்டதால் அதனை காரணம் காட்டி அவரை பழிவாங்கும் வகையில் செயல்படுவது முறையானது ஆகுமா ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதலை முந்தைய அரசு ஏவிவிட்டது. இன்று காவல்துறையினர் திட்டமிட்ட அலட்சியப்போக்கு / கூட்டுச்சதியில் செயல்பட்டு மூத்த வழக்கறிஞரின் மகனின் கொலைக்குக் காரணமாகியுள்ளது. இத்தகைய பாசிசப்போக்கு கண்டனத்திற்குரியது இதனை எதிர்த்து வழக்கறிஞர்களும், மனித உரிமையாளர்களும், அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப தயாராக வேண்டும்.

தமிழக அரசே!

1. ஆய்வாளர் ரியாசுதின், கண்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்து.
2. பிரேத பரிசோதனையை திட்டமிட்டு தாமதப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் திருமங்கலம் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் உதவி கமிஷனர் கலி தீர்த்தன், இணை கமிஷனர் பவானீஸ்வரி ஆகியோரை பணியிட நீக்கம் செய்.

குடியுரிமை பாதுகாப்பு நடுவம், சென்னை

Jun 19, 2011

அநியாயம் நிறைந்த உலகில் நமக்கு மட்டும் நியாயம் வேண்டிக் கேட்க முடியாது – அருந்ததி ராய்

-பவானி-


இந்திய அரசின் போருக்கு எதிராக லண்டன் பொதுக் கூட்டம்:

12 ஜூன் 20
ன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு நாட்டின் கனிம வளங்களை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இந்தியப் பெரும் வணிக நிரறுவனங்களுடன் இணைந்து கொள்ளையிட்டுச் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இப்படி பல ஆயிரக்கணக்கிலான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ள மாநிலங்களில் ஒரிசா, சத்திஸ்கார், ஜார்கண்ட், ஆந்திரம் போன்ற பழங்குடிகள் வாழும் பகுதிகள் முக்கியமானவை. தங்கள் வாழ்வும் வளமும் பறிபோவது கண்டு இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் குறிப்பாக பழங்குடிகள் போராடிவருகின்றனர்.


மலைகள, ஆறுகள், நிலம் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரங்கம் தோண்டவும், ஆலைகள் அமைக்கவும் இந்திய அரசு விற்று வருவது கண்டு சகிக்காத இந்தப் பகுதி மக்களின் போராட்டம் முன்னெப்போதும் காணாத பெரும் வீச்சைக் கண்டு வருகிறது. ஏற்கனவே வறுமையில் உழலும் இந்த மக்கள் கொடுரமான முறையில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போராடும் மக்கள் மீது போலீசைக் கொண்டு நடத்தும் அடக்குமுறைகள் இந்திய அரசுக்கு புதியவை அல்ல. அனால் தற்போதைய அடக்குமுறையில் காந்தியவாதிகள், ஜனநாயக இயக்கங்கள், அரசு சாராத நிறுவனங்கள், இன்ன பிற சில்லறை அரசியல் கட்சிகள் அனைவரும் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.

சிதம்பரம் தலைமையிலான உள்நாட்டு அமைச்சகம் ஏறக்குறைய சாட்சிகள் இல்லாத, அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டுப் போரை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இந்திய ராணுவத்தையும் விமானப் படையையும் இறக்கி விட்டுள்ளது. ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவமும், போலிசும், ராணுவப் படிகளும், விமானப் படைப் பிரிவுகளும் இந்த மாநிலங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்திய அரசின் புள்ளி விபரப்படி நாட்டின் மிகவும் வறுமை வாய்ந்த இந்தப் பகுதியில் உலகின் அதி நவீனப் படைகள் ராக்கெட்டுகள், செய்மதிகள், ஆளில்லா விமானங்கள் அடங்கிய படைகள் இறக்கப்பட்டுள்ளனர். அனைத்து இயக்கங்களும் ஒடுக்கப்பட்டு அந்தப் பகுதியை விட்டு விரட்டியடிக்கப் பட்ட பின்னர் மாவோயிஸ்டுப் புரட்சியாளர்கள் போராடும் மக்களுக்கு தலைமையளித்து வருகின்றனர். எனவே, இந்தப் பழங்குடி மக்களின் எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் மீதான போர் என்று சிதம்பரம் வருணிப்பது ஒரு வகையில் உண்மையே.

ஏகாதிபத்தியப் போர்

எப்படிப் பார்க்கிலும், இந்தப் போர் ஏகாதிபத்தியங்களுக்காக அதன் ஏவலர்களான மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் நடத்தும் போர். இதன் நோக்கங்களை ஐரோப்பிய மக்களுக்கு விளக்கும் முகமாக இங்கிலாந்து நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்திய உழைப்பாளிகள் சங்கம் ((Indian workers Association-Great Britain) பொதுக் கூட்டங்கலையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி மாணவர்கள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் பிரச்சாரம் வருகிறது. இந்தக கொடூரமான போர் குறித்த விழிப்புணர்வு ஐரோப்பிய நாடுகளின் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று சேரும் வண்ணம் பிற சர்வதேச அமைதி இயக்கங்களுடன் இணைந்து லண்டன் நகரில் ஒரு பெருந்திரளானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமது மனித நேயக் கடமையை நிறைவேற்ற வேண்டி ஐரோப்பியப் பொதுமக்களை கேட்டுக கொள்ள இந்தியாவிலிருந்து அருந்ததி ராய், ஸ்வீடன நாட்டு எழுத்தாளர் ஜேன் மிர்தால், நேபாளப் புரட்சி இயக்கத்தின் செயல் வீரர்கள் கலந்து கொண்டு பேசினார். இக்கொட்டத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.


ஜேன் மிர்தால்

ஸ்வீடன நாட்டின் பிரபலமான பொருளாதார அறிஞர் குன்னர் மிர்தால் அவர்களின் மகனும் பிரபல எழுத்தாளருமான ஜேன் மிர்தால் கடந்த நாற்பது வருடங்களாக இந்தியப் புரட்சிகர இயக்களைக் குறித்து மேற்குலகில் எழுதியும் பேசியும் வருபவர். இந்தியப் புரட்சி இயக்கங்கள் ஒன்றிணைந்து மாவோயிஸ்டுக் கட்சியை உருவாக்கிய பின்னர் அதன் செயலர் கணபதி அவர்களை முதன் முறையாக நேரடியாகக் கண்டுபேசி மேற்குலகின் பிரபல பத்திரிகைகளில் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரும் பணிகளை விரிவாக எழுதிவருபவர். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காக எவ்வாறெல்லாம் பசப்புரைகளைப் பேசி கொள்ளையடித்து வருகின்றன; ஈவிரக்கம் அற்றவகையில் படுகொலைகளை நடத்தி வருகின்றன என்பது குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

பழங்குடியினர் மீதான இந்திய அரசின் இந்தப் போர் காலனிய ஆதிக்கத்தின் துவக்கத்தில் அதன் பிதாமகனும் காட்டு மிராண்டியுமான கொலம்பஸ் தலைமையில் ஐரோப்பியர்கள் நடாத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்பானதே. காலனியாதிக்கக் காலத்தியச் சட்டங்களைப் பின்பற்றியே இன்னமும் இந்திய அரசு பழங்குடியினரின் நிலங்களைப் பிடுங்கி அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கி வருகிறது. நடைமுறையில் பழைய காலனியச் செயல்பாட்டுக்கும் இப்போதைய செயல்முரைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை.

இந்திய அரசு வடக்கே உத்தரப் பிரதேசம் தொடங்கி தெற்கில் ஆந்திரம் வரையில் ஒரு காலனியாதிக்க அடக்குமுறை அரசு போலவே வதைத்து வருகிறது. இங்கே நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரிசாவின் வளமான வெற்றிலைக் கொடிக்கால் விளையும் நஞ்சை நிலங்களை கொரியாவின் போஸ்கோ கம்பெனிக்காக சுரங்கம் அமைக்க இந்திய அரசு பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது ஆயிரம் படையினர் (இருபது பட்டாலியன்கள்) குவிக்கப்பட்டு விவசாயிகள் நாளுக்கு இத்தனை விவசாயிகள் என்ற வகையில் விரட்டப்பட்டு வருகிறார்கள்.

மக்களின் நிலங்களைப் பிடுங்கி தனியாருக்கு அளிக்கும் இந்திய அரசு இதை ‘பொதுப் பணிக்காக’ செய்வதாகச் சொல்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை அளிக்கும் இப்பணியை எப்படி பொதுப் பணி என்று சொல்வது?

இத்தகைய வன்முறை இந்திய மக்களை மட்டும் அல்லாது இந்தியா என்ற நாட்டின் இருப்பையே கேள்விக்குரியதாக்கி வருகிறது.

ஆண்டுக்குப் பத்து சதம் வளருவதாக சொல்லப்படும் இந்தியாவில் உண்ண உணவின்றி நூற்றுக்கு நாற்பது பேர் வறுமையில் உழல்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி இந்தியாவுக்குத் தேவையில்லை, மாறாக இந்திய மக்களுக்கு உணவளிக்கும் விதமான சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை.

இந்திய மக்களின் வீரம் செறிந்த எதிர்ப்புப் போராட்டங்களை இந்தியாவில் மட்டும் அல்லாது, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்கலும் முழுதும் மறைத்து செய்திகளை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. இப்படி செய்திகளை மறைத்து வருவது இங்கே ஐரோப்பாவில் ஒன்றும் புதிய வழக்கம் அல்ல. முதல் உலகப்போருக்கு முந்திய காலத்திலும், அதன் பின்னர் இரண்டும் உலகப் போருக்கு ஜெர்மனியின் ஹிட்லர் தயாராகிக் கொண்டிருந்த காலத்திலும் இதுதான் நடந்தது.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயப்பெல்ஸ் கோண்டு வந்த பத்திரிக்கை ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் இதைத்தான் செய்தது. கூடவே, பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளம், கைக்கூலி, அந்தஸ்து இன்று அந்த வேலையை திறம்படச் செய்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு ஆதரவு அளித்த எந்த ஒரு பத்திரிகை ஆசிரியரும் தண்டிக்கப்படவே இல்லை. அவர்கள் அளித்தது வந்த பொய்ச் செய்திகள் தான் போருக்கு ஊக்கம் அளித்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றும் அது தான் இன்று இங்கே ஐரோப்பாவிலும் அங்கே இந்தியாவிலும் நடக்கிறது.

உலகம் முழுக்க உள்ள அரசுகள் இந்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. நடுநிலை வகிப்பதாகச் சொல்லும் ஸ்வீடன போன்ற நாடுகள் கூட ஏகாதிபத்தியப் போர்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, இந்திய அரசின் இந்தப் போரை ஐரோப்பாவில் உள்ள நியாயம் அறிந்த நல்ல உள்ளம படைத்தோர் அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கடமைப் பட்டு உள்ளார்கள்.

அருந்ததி ராய்

மத்திய இந்தியாவில் இந்திய அரசு நடத்தி வரும் போர் குறித்து எழுதியும் பேசியும் பிரபல இந்திய நூல் ஆசிரியர் அருந்ததி ராய் சிதம்பரம் தலைமையில் நடத்தப் பட்டு வரும் இந்த மனிதாபிமானம் அற்ற இந்தப் போரின் கொடுமை குறித்து விரிவாக விளக்கினார். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களில் நடந்து வந்த போர் இன்று இந்தியாவின் இதயத்திற்கு வந்திருக்கிறது. போராடும் தேசிய இனங்களான நாகர்கள், மிசோக்கள், மனிப்புரிகள், அஸ்சாமிகள், போடோக்கள், காஷ்மிரிகள் மீது இந்திய அரசு அறுபது ஆண்டுகளாக நடத்தி வரும் போரின் தொடர்ச்சியாகவே இந்தப் போரையும் நாம் பார்க்க வேண்டும். இந்தத் தேசிய இனங்கள் அனைத்தும் சிறுபான்மையான பழங்குடிகள் அதிலும் பலர் கிறித்தவம் அல்லது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சிருபானமையினர்.

எவ்வாறு அஸ்சாமிகளின் நில வளமும் கனி வளமும் இந்திய அரசுக்குத் தேவையோ அதைப் போலவே, மத்திய இந்தியப் பழங்குடிகளின் நிலம் தேவை. எனவே தான் இந்தப் போர் நடக்கிறது.

இரண்டு லட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு நிற்கும் போது மக்கள் எப்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த முடியும். எனவே, ஆயுதம் தாங்கிய போர் என்பது தவிர்க்க முடியாதது. அதைத்தான் மாவோயிஸ்டுகள் தலைமையில் பழங்குடிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். நியாயம் மிக்க இந்தப் போராட்டத்தை சிதம்பரம் கொடுமையான வழியில் ஒடுக்கி வருகிறார்.

தான் நிதி அமைச்ச்சராவதற்கு முதல் நாள் வரை வேதாந்தா என்ற சுரங்கக் கம்பெனியின் இயக்குனராக இருந்தவர் சிதம்பரம். பல காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நில ஒதுக்கீடுகள் இவர் அமைச்சரானவுடன் மிக விரைவில் நடைபெறுகிறது. இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்திய அரசின் அமைச்சர்களை இயக்குவது யார் என்று.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில காலம் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசும் போது இந்தியாவை அடிமையாக்கி ஆட்சி புரிந்த இங்கிலாந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். காலனிய ஆட்சி வழங்கிய சட்டங்கள், போலிஸ், நீதிமன்றங்கள் அனைத்தும் பிரிட்டன் இந்தியாவிற்கு வழங்கிய கொடிகள் என்றும் அவை மிகவும் உதவியாக இருப்பதாகவும் மன்மோகன் சிங் புகழ்ந்தார். அது உண்மை தான்- அதே காலனிய காலச் சட்டங்கள், நீதி மன்றங்கள், போலிஸ், ராணுவம் போன்ற அமைப்புகளைக் கொண்டு தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் மன்மோகன் புகழ்ந்த காரணத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இலங்கைப்போரில் இந்தியா

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடும் போரில் இந்தியாவின் பங்கு குறித்தும் தற்சமயம் இந்தியா அரசும், அரசியல்வாதிகளும் காத்துவரும் அமைதி பற்றியும் அருந்ததி பேசினார்:

தமிழ் மக்கள் அனைவரையுமே ஒட்டு மொத்தமாகப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு பெரும் பேரழிவு ஆயுதங்களுடன் குண்டு மழை பொழிந்து ஒரு இனத்தையே அழிக்கும் போர் அங்கே நடந்திருக்கிறது. மருத்துவமனைகள் குறி வைத்துத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக பெருந்திரளான மக்கள் கொன்று ஓழிக்கப்பட்டிருக்கின்றர். ஆனால், இதுபற்றி இந்தியாவில் அனைவரும் மவுனமாக இருந்து வருகின்றனர்.

இந்த மயான அமைதியில் உறைந்திருப்பது கொலைகளுக்கு உதவியாக இருந்த இந்திய அரசு மட்டும் அல்ல. கூடவே, இந்திய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகைகள், மக்கள் உரிமை அமைப்பினர், ஜனநாயகவாதிகள், போராடும் மக்கள் இயக்கங்கள் கூட இது விசயத்தில் மவுனமாக இருக்கின்றனர். இந்த மனச் சாட்சியற்ற மவுனம் பல காலம் இந்திய மக்களை வதைக்க இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சின்னஞ்சிறு நாடான இலங்கை பல பத்து ஆயிரம் மக்களைக் கொன்று தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக் கொண்டது போலவே தாமும் தாம் விரும்பும் ஒடுக்குமுறைகளைச் சாதித்துக் கொள்ளவே இந்தியா போன்ற பிற தெற்காசிய நாட்டு அரசுகள் இவ்வாறு அமைதியாக இருந்து வருகிறார்கள். நமக்கு வருத்தம் தரும் வகையில் பிற போராடும் இனங்களான காஷ்மீரிகள் போன்றோர் கூட இதில் மவுனம் காத்து வருகிறார்கள். ஆனாலும், இது சரியல்ல.

இலங்கைப்போருக்கு நேரடி உதவி செய்த சீன, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசியாவில் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் தாமும் இலங்கையின் வழியைப் பின்பற்றுவது பற்றி மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இலங்கைத் தமிழ் மக்கள் மீது நடந்தது போன்ற ஒரு இன ஒழிப்பு இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பதால் இந்திய அரசின் அரசியல் கட்சிகளின் மவுனம் ஒன்றும் புரியாததல்ல.

இந்த மவுனத்தை, நாம் அனுமதிக்க முடியாது, அதை உடைத்தே ஆக வேண்டும். ஒரு இனமோ அல்லது ஒரு பிரிவினரோ அழிக்கப்படும்போது நாம் அதைக் கண்டனம் செய்யாவிட்டால் சில காலம் கழித்து அது நம் மீதே வந்து சேரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அதைக் கண்டித்தே ஆக வேண்டும். அநியாயங்கள் நிறைந்த இந்த உலகில் நமக்குத் தேவையான நியாயத்தை மாத்திரம் நாம் கேட்டுப் பெற்று கொண்டு விட முடியாது. நியாயம் என்பது அனைவருக்குமான தேவை, எனவே, அனைவருக்கக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

May 28, 2011

பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா-கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.


இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை.

பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது.

சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை?

இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்.

பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள்.

ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.

அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம்

கோடிப்புறத்து கிராமங்களின்

குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது

இங்கு மரணத் தீர்ப்பெழுத

குறைந்த பட்ச

சமுசயங்களே காணுமாயுள்ளது.

என்று எழுதுகிறார் பானு.

எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன.

1.
“மரண பயத்திடமிருந்து

தலையை மறைப்பதை விட

ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே

பெரும்பாடாய் இருக்கிறது.”

2.

“ஒரு கவிதையையோ

காகிதத்தையோ

அல்லதொரு சிறு குறிப்பையோ

பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?)

சுட்டப்படும் இடங்களில் கூட

மறைத்து வைப்பதென்பது

தற்கொலைக்கச் சமனான செயல்

ஏனெனில்

எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும்

முதலில் கைவிட்டுத் தேடுவது

இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’

3.

‘தெரு நாய்கள் கூட

கடலை எண்ணையின் நாற்றம்

தூரத்தில் வரவே

வாலை மடக்கி

யோனியைப் பொத்திக் கொண்டோடப்

பழக்கப்பட்டு விட்டன.’

4.

‘ஓ பாரதமே

எல்லைகள் தாண்டி

வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும்

முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும்

பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை

அவர்களுக்குக் கொடு.’

பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது.

நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ.

சேர்ந்து…?

ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ.

எடுத்து…?

நாட்டுக்காகப் போரடப் பொகிறேன்.

ஹா…ஹ…ஹா…ஹா…

….

கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு.
என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார்.

தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது
போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது.

“….

நளத்தியென்றும்

பள்ளி பறைச்சியென்றும்

அழுகல் வாயால் சொல்லெறிந்து

அடித்து விரட்டியதும்

இந்தக்

கடைசிக் கலட்டி வெளிக்குள்தான்.

மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து

அடம்பிடிக்கிறதென் கவிதை.

முஸ்டியை உயர்த்தி

கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது.

என்னவென்று?

உங்கள் பல்லுக் கில்லெல்லாம்

அடித்துடைக்கும் படி.

…”

இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள்.


நன்றி: மற்றது

May 18, 2011

பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்

மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்
தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades
உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர்

யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர்,

இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) ,

நூல் ஆசிரியர்

வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan),
இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி-
(Imperialism and Proletarian Revolution 21st Century),

நேபாள நூல் ஆசிரியர்

நிகழ்ச்சி:
ஞாயிறு ஜூன் 12, 2011
Sunday, June 12, 2011
பகல் 1:30 தொடங்கி மாலை 5.00 வரை

நிகழ்ச்சி அரங்கம்
பிரெண்ட்ஸ் ஹவுஸ்
Friends House, Main Hall, 173 Euston Road, London NW1 2BJ

நிகழ்ச்சி அமைப்பும் ஏற்பாடும்
இந்திய மக்கள் மீதான போருக்கு எதிரான சர்வதேச பரப்புரை இயக்கம் International Campaign Against War on People of India (ICAWPI) www.icawpi.org
இந்திய உழைப்பாளர் சங்கம் (Indian Workers Association, GB)

மேல் விவரங்களுக்கு: june12-London@icawpi.org

அனைவரும் வருக !! ஆதரவு தருக !!

May 1, 2011

COMMITTEE FOR THE RELEASE OF POLITICAL PRISONERS

PRESS RELEASE
30/04/2011


Condemn the Illegal Detention of Central Committee Members of the
CPI (Maoist) Vijay Kumar (Jaspal), Varanasi Subramaniam (Saroj),
Jhantu Mukherjee along with Three Villagers by the Bihar Police!
Demand the Immediate Production of the Six before a Court of Law!According to media reports, three Central Committee members of the CPI (Maoist) – Vijay Kumar (Jaspal), Varanasi Subramaniam (Saroj) and Jhantu Mukherjee – along with three villagers Shyam Rishi, Aniruddha Rishidev and Mohammad, have been taken into custody after a joint operation by the Special Task Force (STF) of Bihar Police, Andhra Pradesh SIB and central intelligence agencies on 29 April 2009 from Basalgaon, Katihar district. In spite of repeated queries by civil rights activists and journalists, Bihar Police have declined to acknowledge the arrests. Moreover, even after 24 hours have passed since the arrests, the police have not produced the six persons before a court of law. Bihar Police is therefore guilty of violating the law, which stipulates that any arrested person must be produced before a court within 24 hours. In the context of this denial and blatant flouting of the legal provisions, we at the Committee for the Release of Political Prisoners believe that the lives of the six detainees are in danger, given the notorious track record of Bihar Police, AP SIB and central intelligence agencies in treating political prisoners in their custody. There have been reports that detainees and prisoners are routinely subjected to torture, brutalities and beating in the name of ‘interrogation’ by the police and intelligence agencies, even to the extent of committing custodial killings and fake encounters.

We strongly condemn the illegal detention of Vijay Kumar, Varanasi Subramaniam, Jhantu Mukherjee and the three villagers. We demand that they be produced before a court of law immediately, and be allowed access to lawyers of their choice. We also reiterate that the Indian State need to allow space for political dissent and not criminalise it by invoking draconian laws against dissident voices. CRPP therefore demands the unconditional release of the six political prisoners who are presently in custody of the Bihar Police.


In Solidarity,

Gurusharan Singh
President

Amit Bhattacharyya
Secretary General

SAR Geelani
Working President


Rona Wilson
Secretary, Public Relations

Mar 27, 2011

பிரிட்டிஷ் தொழிலாளர்க​ளின் லண்டன் ஆர்ப்பாட்ட​ம்: தேசிய நடவடிக்கை நாள் -பவானி
உலகாளும் நிதி மூலதனம்

நிதி மூலதனத்தின் ஆதிக்கம் உலக அரங்கில் பெருகியதன் காரணமாக பல மாற்றங்களை உலகம் கண்டு வருகிறது. வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு முதன்மையான் காரணமாக அமெரிக்க வீட்டுக் கடன் மோசடித் திட்டங்கள், யூக வாணிபத் திட்டங்களைக் காரணம் சொன்னாலும் இதர உள்நாட்டுக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன. பல ஐரோப்பியத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இரும்பு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பணக்கார நாடுகள் என்று கருதப்படும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொழில் நிறுவனங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மிக உயர்ந்த வாழ்நிலைமையில் வசதியாக இருந்த அயர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் திவால் நிலைமையை எட்டி ஐரோப்பிய ஒன்றியத்தால் மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளன. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இக்கட்டான நிலையினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் பொருளாதாரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டு அரசாங்கத்திற்கும், தனியார் மூலதனத்திற்கும் வேறுபாடு இல்லாத ஒரு நிலை உருவாக்கி உள்ளது. இதனால் நிறுவனங்கள் திவால் ஆவது போலவே நாடுகளும் திவால் ஆகி வருகின்றன.

ஆம் நாடுகள் எப்படித் திவால் நிலைமையை அடையும் என்று பலரும் திகைப்படையக் கூடும். ஆனால், அதுதான் உண்மை. முதலாளித்துவத்தின் ஒரு பரிமாணமாக நாடுகளின் பொருளாதாரங்கள் நிதி மூலதனச் சந்தைகளுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட பின்னர் நிதி மூலதனத்திற்கு ஏற்படும் அதே கதி இறையாண்மையுள்ள நாடுகளின் அரசாங்களுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளன. தனியார் நிதி முதலாளிகள் செய்து வரும் மோசடிகள் அல்லது பங்கு மார்க்கெட் சூதாட்டம் போன்ற மோசடித் திட்டங்கள் இறையாண்மை உள்ள அரசாங்கங்களையும் கட்டுபடுத்தி அவர்களை சூதாட்டத்த்தின் ஜாமீன்தாரர்களாக மாற்றி உள்ளன. நாட்டின் எல்லா நிறுவனங்களையும் நிதி மூலதன முதலாளிகள் தங்களின் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இதனால், சுரண்டல் எல்லை மீறி பங்குச் சந்தைக்கு சிறிதும் தொடர்பில்லாத சாதாரண மக்களையும் கூட வதைக்கத் தொடங்கிவிட்டன. முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்கள் எதுவும் இந்த மாயையை விளக்கும் நிலையில் இல்லை. புரட்சிகர இயக்கங்கள், மார்க்சியத் தத்துவ ஆசிரியர்கள் முன்னறிவித்த இந்த அரசியல் நிகழ்வு பல காலம் சொகுசு வாழ்வு வாழ்ந்து வந்த சாதாரண அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கும் புரியும் நேரம் வந்து விட்டது. இந்த நாடுகளில் தொழில் துறை வளர்வதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதால் சாதாரண மக்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நல்வாழ்வுத் திட்டங்கள் சிறுகச் சிறுக நிறுத்தப்பட்டுவருகின்றன. பிரிட்டனில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் இங்கே விவாதிக்கலாம். இந்த அரசியல் பிரிட்டிஷ் பொருளாதார நிலவரம் அநேகமாக எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் பொருந்தும்.


தேய்ந்துவரும் ஐரோப்பா பிரிட்டிஷ் அரசாங்கம் 2007 தொடங்கி 2009 வரையிலான காலத்தில் பெரும் பணத்தைப் பங்குச் சந்தைகளிலும் அமெரிக்க வீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்து நஷ்டமடைந்த வங்கிகளுக்கு சுமார் 3 ட்ரில்லியன் பவுண்டு (அதாவது 30,000 கோடி பவுண்டுகள்) பணத்தைக் கொடுத்திருக்கிறது, அவர்கள் செலுத்தவேண்டிய வரிகளையும் தள்ளுபடி செய்துள்ளது. இப்படிக் கொடுக்கப்பட்டதில் பெருவாரியான பணம் தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் சேமித்து வைத்திருந்த பணம். இது தவிர அரசு ஆண்டு தோறும் மக்களின் நல்வாழ்வு, மருத்துவச் செலவு, கல்வி, சாலைகள் போன்ற மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம். நெருக்கடி தீர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும், பணத்தைப் பெற்றுக்கொண்ட வங்கிகளும் நிதித் துறையினரும் அதனைத் திரும்பித் தருவதாக இல்லை. இதன்கூடவே பிறர் பணத்தில் தப்பிப் பிழைத்த இந்த வங்கிகள் தங்கள் பித்தலாட்டங்களைக் குறைத்துக் கொண்டு நேர்மையான வழிகளில் செயல்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக இந்த வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவங்களும் முன்பை விட அதிகமாக பங்குச் சந்தைச் சூதாட்டங்களையும், அரசுப் பணத்தைக் கொள்ளையிடுவதையும் தொடர்கின்றன. எனவே, புதிய வருமானம் ஏதும் இல்லாத நிலையில் பிரிட்டன் அரசாங்கம் தன்னுடைய ‘அரசாங்கச் செலவுகளைக் குறைப்பது தவிர வேறு எந்த வழியும் இல்லை’ என்று அறிவித்துள்ளது. அரசாங்கச் செலவு என்பது கொஞ்ச நஞ்சம் இருந்து வரும் தொழிலாளர் பாதுகாப்புகள், நல்வழ்வுத் திட்டங்களைக் குறிக்கும். இப்படி நிறுத்தி விடுவது மக்களின் அன்றாட வாழ்வில் மேலும் துயரங்களைக் கொண்டுவரும். மேலும், தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சென்றிருக்கிறது. 2010ம் ஆண்டு நிலவரப்படி உழைக்கத் தயாராக உள்ள வயது வந்தவர்களில் நூற்றுக்கு 20 பேருக்கு வேலையில்லை. இப்படி வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம். அதாவது ஆறில் ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வேலை எதுவும் இன்றி அரசு தரும் கைச் செலவில் காலம் தள்ளி வருகிறது. இந்த நெருக்கடி கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பிரிட்டன் சந்தித்திராத ஒன்று என்று அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கூடவே, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களையோ அல்லது மக்களின் வாழ்வுக்கு அடிப்படியான மாற்றத்தைக் கொண்டு வரும் பொருளாதார வாய்ப்புகளையோ உருவாக்குவதற்குப் பதிலாக ஈராக் போன்ற நீண்ட போரில் ஈடுபட்டு மேலும் மேலும் நெருக்கடிகளையும் அரசாங்கம் உண்டாக்கி வருகிறது. நாட்டின் மிகப் பெரும் நிறுவனங்களான பிரிட்டிஷ் பெட்ரோலியம் (B.P) , பி.ஏ.இ (BAE) போன்ற ஆயுத நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ஒரு சில வணிக நிறுவனங்கள், வங்கிகள் கொழுத்து வந்தாலும் பெருவாரியாகத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் நிறுவனங்கள் எதுவும் எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மாறாக அந்த நிறுவனங்கள் மேலும் மேலும் மூடப்பட்டு ஆட்கள் குறைக்கப்பட்டு தொழில்கள் பிற ஆசிய நாடுகளை நோக்கிச் செல்கின்றன. எனவே, பிரிட்டிஷ் பொருளாதாரம் தேய்ந்து வருகிறது.வறுமையில் வாடினால் வரி பணத்தில் கொழுத்தால் வரியில்லை

இது இப்படியிருக்க மக்கள் பணத்தை தம் இஷ்டம் போலச் செலவழித்தது மட்டுமில்லாமல், தாம் பங்குச் சந்தையில் நஷ்டம் அடைந்த காரணத்தைச் சொல்லி வரும் வங்கிகள் லாபம் வரும்போது கூட வரி கட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திவால் நிலையில் இருந்த வங்கிகளான – லாயிட்ஸ் (Lloyds TSB), பார்க்லேஸ் (Barclays), ஸ்டாண்டர்ட் சார்டேட் (Standard Chartered), எச்.எஸ்.பி.சி (HSBC) இந்த 2010 ம் ஆண்டு கண்ட லாபம் சுமார் 24 பில்லியன் பவுண்டுகள். ஆனால், அவை கட்டிய மொத்த வருமான வரி வெறுமனே ஒரு சதவீதத்திற்கும் குறைவு. சுருங்கச் சொன்னால் வங்கிகளின் தலைமை அதிகாரிகள் பெற்றுக் கொண்ட சம்பளம் அந்த வங்கிகள் கட்டிய வருமான வரியை பல மடங்கு அதிகம்.

மிகப்பெரும் வங்கியான பார்க்லேய்ஸ் வங்கி 2009 ம் ஆண்டில் சம்பாதித்த லாபம் 11.6 பில்லியன் பவுண்டுகள் அனால் கட்டிய வரி வெறுமனே, 113 மில்லியன் பவுண்டுகள். அதாவது சுருங்கச் சொன்னால் நூற்றுக்கு ஒரு சதவீதம் வரியாகக் கட்டியது. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் தினக்கூலிப் பணியாளரான ஒரு லண்டன் நகரத் துப்பரவுத் தொழிலாளி கட்டும் வருமான வரி சுமார் 20 சதவீதம். அவர் பெறும் சம்பளம் மிகமிகக் குறைவு. இப்படி நிதி முதலாளிகள் பிரிட்டனில் ரயில், பஸ், சாலைகள், துப்பரவு, மின்சாரம், எரிபொருள், வீட்டு வசதி போன்ற பணிகள் அனைத்தும் தனியார் வசமே உள்ளன. குறிப்பாக ஆரம்பக் கல்வியும் மருத்துவமும் மட்டுமே அரசாங்கத்தின் கீழ் உள்ள முக்கியமான துறைகள். ஏறக்குறைய நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தமது கைகளுக்குள் கொண்டு வந்துள்ள தனியார் நிறுவனங்கள் கீழ்தட்டில் உள்ள சாதாரண அரசுப் பணியாளர்கள், இதர தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி கவலைப் பட்டதாகக் தெயர்யவில்லை. தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைகளின் அளவு சுருங்கிக் கொண்டே வருகிறது இதனால் அவர்கள் வருமானம் குறைந்துபோய் கடனில் மூழ்கி வருகின்றனர். இதே வேளையில், அரசாங்கம் ‘சிக்கன நடவடிக்கைகளில்’ இறங்கியுள்ளது. சிக்கனம் என்றால் ஆடம்பரச் செலவுகளைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது. மாறாக, சிக்கனம் என்பது: சுகாதாரத்திற்கு அரசாங்கம் செலவு செய்து வரும் தொகையைக் குறைத்து அரசு மருத்துவ மனைகளை மூடி தனியாருக்கு விற்று விடுவது வேலையில்லாதவர்களுக்கு அரசு தந்துவரும் கைச் செலவுப் பணத்தை குறைப்பது பள்ளிகள், நூலகங்கள், உடற்பயிற்சிக் கூடங்களை முடிந்தவரை தனியாருக்கு விற்பனை செய்து விடுவது அல்லது மூடி விடுவது கல்விக்கட்டணங்களை உயர்த்துவது – கல்லூரிக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களைக் குறைத்து வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டுவதுஅரசாங்கத்திற்குச் சொந்தமான தோப்புகளையும் காடுகளையும் தனியாருக்கு விற்று விடுவது பொதுவாக ஏழை மக்கள் குடியிருக்கும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் ரயில் பஸ் சேவைகளை குறைத்து விடுவது ஊனமுற்றவர்கள் இயலாதவர்களுக்கு வழங்கும் நிதி உதவிகளைக் குறைப்பதுமேலே கண்டவற்றில் பல உரிமைகள் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் போராடிப் பெற்றவை.

இந்தச் சலுகைகளும் உரிமைகளும் ஒவ்வொன்றாகப் பறிபோவதைச் சகிக்காமல் மாணவர்களும் தொழிலாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் அரசு ஊழியர்களும் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, பொதுவில் எந்தவொரு அரசியல் ஊக்கமும் இல்லாமல் இருந்து வரும் பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் எப்போதும் இல்லாத அளவில் ஒரு நாடு தழுவிய தொழிலாளர் எழுச்சியைக் கண்டு வருகின்றன எனச் சொல்லலாம். இந்தச் ‘சிக்கன நடவடிக்கைகள்’ மூலம் மூன்று லட்சம் பேர் அரசாங்கப் பணிகளில் இருந்து விரட்டப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதவிர அரசுடன் நேரடியாக இணைந்த தனியார் பணிகள் இதை விட அதிகமாகப் பதிக்கப்படுவார்கள். அரசாங்கத் துறைகள் நிலைமை இப்படியென்றால் தனியார் நிறுவனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அரசாங்கப்பணியாளர்கள் – அதாவது ஆசிரியர்கள், மருத்துவ ஊழியர்கள், தாதிகள், நகராட்சி ஊழியர்களுக்கு இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படமாட்டாது. ஆனால், விலைவாசியோ ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்ந்து வருகிறது.


மார்ச் 26 போராட்டம்

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர். கல்லூரிக் கல்விக் கட்டணம் குறைந்தது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசாங்கத்தின் உதவி பெறும் பல்கலைக் கழகங்கள் வருமானமில்லாத பாடத் துறைகளை மூடச் சொல்லி உத்திரவிட்டுள்ளது. படிக்க வரும் மாணவர்கள் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். தற்போதைய நிலையில் மாணவர் ஒருவர் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தால் அவர் படிக்க வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தக் குறைந்தது சுமார் இருபது முதல் முப்பது வருடங்கள் பிடிக்கும். சுருங்கச் சொன்னால், பட்டப் படிப்பு படித்த ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் உழைத்து தான் பெற்ற கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த மாற்றத்தைக் ‘கல்வித் துறைச் சீர்திருத்தம்’ என்று சொல்லி வருகிறது. இத்தகைய மாற்றத்தினால் மிகுந்த பயன் பெறுவது கடன் வழங்கக் காத்திருக்கும் வங்கிகள் தான். கல்வி என்பது ஒரு விற்பனைப் பொருளாகி பெரும்பகுதி மக்களுக்கு எட்டாக் கனியாகி விட்ட நிலையில் அனைவரும் ஒரு வெறுப்பின் விளிம்பில் இருக்கின்றனர். ஏற்கனவே, வேலைகளை இழந்து வருமானம் குறைந்து படிக்க வரும் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தைகைய நடவடிக்கைகளை எதிர்த்து மாணவர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் போராட்டம் நடத்த அணிதிரட்டி வந்தன. ஆனாலும் பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. எகிப்து, துனிசியா, சவுதி அரேபியா, லிபியா, ஏமன் போன்ற அரபு நாடுகளில் தான் போராட்டங்களை பொதுப் பெயரிட்டு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களை தெருவுக்கு அழைக்க ‘இன்று வெஞ்சின நாள்’ (Day of Rage), ‘இன்று நடவடிக்கை நாள்’ (Day of Action), ‘இன்று விரட்டியடிக்கும் நாள்’ (Day of departure) என்று நாள் குறித்து அரசியல் படுத்தினார்கள். அதே முறையை பிரிட்டிஷ் மாணவர்களும் பின்பற்றி மார்ச் மாதம் 26 ம் நாளை ‘தேசிய நடவடிக்கை நாள் (Day of Action)’ என அறிவித்து அனைவரையும் தெருவுக்கு வரக் கோரிக்கை விடுத்தனர்.

இதே போலவே, நாடு தழுவிய மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த பிரிட்டிஷ் தொழிற்சங்கக் காங்கிரஸ் (TUC) அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் தலைநகரில் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததது. பல ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக இத்தகைய ஒரு போராட்டத்திற்கான அழைப்பு பெரும் வெற்றி பெரும் என்று நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. போராட்டம் பலமடைந்து வருவதை எண்ணி அதனைச் சிதைக்க பிரிட்டிஷ் அரசும் போலிசும் பல வழிகளில் முயன்றன. போராட்டத்திற்கு முந்திய இரண்டு தினங்களில் எல்லாப் பிரிட்டிஷ் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடிக்கும் என்று உளவுச் செய்திகள் கூறுவதாக அறிவித்து பெண்களும் குழந்தைகளும் போராட வரவேண்டாம் என்று வெளிப்படையாக கட்டுரைகலையும் செய்திகளையும் வெளியிட்டன. ஆனால் தொழிற்சங்கங்கள் குழந்தைகளோடும் குடும்பத்தோடும் அனைவரும் அமைதியாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவேண்டி அறிவிப்பு விடுத்தன. இதில் என்ன சிறப்பு என்றால் எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் இந்தப் போராட்டத்தில் பங்குபெறவில்லை என்பதே. ஆளும் கூட்டணியிலும் எதிர்க்கட்சியிலும் உள்ள ஒரு சில தலைவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் பங்கேற்றனர்.

ஐந்து லட்சம் பேருக்கு அதிகமான மக்கள் பங்கேற்று அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டம் கடந்த ஐம்பது வருடங்களில் நாடு கண்டிராத பெரியதொரு தொழிற்சங்கப் போராட்டம் என்று பலரும் கருதுகின்றனர். மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் கலந்துகொண்டு இந்த போரட்டத்தில் பங்கேற்றனர். வியப்பு என்னவென்றால் அண்மையில் எகிப்து, துனிசியா, போன்ற அரபு நாடுகளின் மக்கள் போராட்டத்தினால் ஊக்கம் பெற்ற்று போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பலர். அரசின் சொற்பமான நிதி உதவிகளில் காலம் தள்ளி வரும் முதியவர்கள், இயலாதவர்கள், ஊனமுற்றவர்கள், குருடர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அணித்துப் பிரிவினரும் நாடு முழுவதிலும் இருந்து லண்டன் வந்திருந்தனர்.

லண்டன் நகர நிர்வாகம் நகரத்தை ஒரு போர்க்களம் போல மாற்றியிருந்தது. ஆயிரக்கணக்கான போலிசார் கவச வாகனங்களுடன், தடிகள், கேடயங்கள் போன்ற எல்லா விதமான ஆயுதங்களுடனும் அணிவகுத்து நின்றிருக்க, பல ஹெலிகாப்டர்கள் நாள் முழுதும் வானில் பறந்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தன. லண்டன் நகரமே ஏதோ ஒரு போரில் ஈடுபட்டுள்ளது போல் ஒரு மாயக் காட்சியை ஏற்படுத்தியிருந்தனர். பிரிட்டிஷ் தொலைக் காட்சிகள் பத்து லட்சம் பேர் கலந்து கொண்ட போராட்டத்தைக் காட்டியதை விட நூற்றைம்பது ஆர்பாட்டக்காரர்கள் தனியாக வேறொரு மூலையில் நடத்திய கதவு சன்னல் உடைப்புகளை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டே இருந்தன. போலீசார் புடைசூழ இந்த ஆர்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சன்னல் உடைப்புகளை ஒரு வேளை போலிசின் சதியோ என்று கூட சிலர் சந்தேகிக்கின்றனர். அநேகமாக எல்லாத் தொலைக்காட்சிகளும் மீண்டும் மீண்டும் இதனையே தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தது அனைவருக்கும் வியப்பைத் தருவதாக இருந்தது. இந்த நடவடிக்கையை வன்முறைப் பூச்சாண்டியைக் காட்டி மக்களை வீதிக்கு வர விடாதபடி செய்வதில் லண்டன் போலிஸ் செய்துவரும் முயற்சி என்றே பல மாணவர்களும் தொழிலாளர்களும் கருதுகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஒரு பகுதியாக திரளான மாணவர்கள் வரி ஏய்ப்புச் செய்து வரும் பிரபல் விற்பனை நிறுவனங்கள், வங்கிகள், ஆயுதக் கம்பெனிகள், பன்னாட்டு வணிக நிறுவனங்களை ஆக்ரமித்து உள்ளிருந்துகொண்டு மறியல் செய்தனர்.

போராட்டம் இனிவரும் நாட்களில் மென்மேலும் தீவிரமாகி பொது வேலை நிறுத்தத்தை நோக்கிச் செல்லும் என்றே அனைவரும் கருதுகின்றனர். பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் எந்த ஒரு மாற்று அரசியல் சிந்தனையும் இன்றி இயங்குவதால் பெரியதொரு மாற்றம் எதுவும் வந்து விடும் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது. ஆனால், டோனி பிளேர் பிரதமர் ஆன பின்னால் தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் வழக்கமாக ஆதரவு அளிக்கும் தொழிற்கட்சியினர் (Labour Party) முற்றிலும் தனிமைப்பட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளனர். இந்த வெற்றிடத்தைப் புரட்சிகர சக்திகள் ஒரு அரசியல் பாதையை மேற்கொண்டு நிரப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Feb 22, 2011

மாவோயிஸ்டுகளும் ஆட்கடத்தலும் -பவானி

கடந்த மூன்று நாட்களாக, இந்தியப் பத்திரிகைகள் தொலைக் காட்சிகளில் ஒரே ஒப்பாரி: மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் மாவட்ட ஒரு நல்ல ஆட்சித்தலைவரைக் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள். கொலைகார்கள். ஐயோ என்ன இது மோசம். மாவோயிஸ்டுப் பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது. அவர்களோடு பேசக்கூடாது அவர்களுடனான போரை தீவிரப்படுத்த வேண்டும். விமானங்களைக் கொண்டு தேடவேண்டும். முடிந்தால் ராணுவ கமாண்டோக்களைக் கொண்டு அவர்களை மீட்க வேண்டும்! இப்படிப் பலவாறாக பேச்சு! உளறல் !

இதில் என்ன உண்மை
மாவோயிஸ்டுக் கட்சியின் ஆயுதப் படைப் பிரிவினர் ஒரிசாவில் உள்ள மல்கான்கிரி மாவட்ட ஆட்சித் தலைவரையும், உள்ளூர்ப் பொறியாளர் ஒருவரையும் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். மல்கான்கிரி ஒரு அரசின் எந்த வசதியையும் பெறாத ஒரு மாவட்டம். மிகவும் வளமான இங்கே வற்றாத ஆறுகளும், அணைகளும், விலை மதிப்பில்லாத கனிம வளங்களும் கிடக்கின்றன.

இதுவரை எந்த ஒரு அதிகாரியும் சென்று பார்க்காத ஒரு குக்கிராமத்தை இந்த அதிகாரி சென்று முதல் முறையாக சென்று பார்வையிட்ட பொழுது அவர் கடத்திச் செலலப்பட்டார். ஒரிசா ஆந்திரா மாநில எல்லையில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் சூழ்ந்த 150 கிராமங்களில் இந்தக் கிராமும் ஒன்று. இங்கே மின்வசதி ஏதும் இல்லை. அப்படிப்பட்ட இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைத் தொடங்கிவைக்க இந்த அதிகாரி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அங்கே அருகில் இருக்கும் பாலிமேலா நீர்த்தேக்கம் மிகப் பெரிய அணைகளில் ஒன்று, கூடவே, நீர்மின் நிலையமும இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்கும் மேலாகியும் இன்னும் இந்தக் கிராமத்திற்கு ரோடும் இல்லை. மின்சாரமும் இல்லை. அதனாலதான் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட தன்னுடைய ஜீப் வண்டியில் போகமுடியாமல் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.

அதைவிடக் கொடுமை இந்தக் கிராமத்தின் கரையில் எடுக்கப்படும் மின்சாரம் இந்த மக்களுக்கு விளக்கு எரிக்கக்கூட கொடுக்கப் படவில்லை. ஆனால், இங்கு எடுக்க்கபடும் மின்சாரம் மாநிலம் முழுதும் சென்று இந்திய தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்கு முதல் முறையாகச் சென்ற ஒரு அதிகாரியைத்தான் அந்த ஊரில் தங்கி இருந்த மாவோயிஸ்டுகள் கடத்திக்கொண்டு போய்விட்டார்களாம். சாதாரணமாகப் பார்த்தால் இதில் என்ன ஆச்சர்யம். ஒரு வேளை இந்த அதிகாரியைப் பார்த்து மக்கள் பயந்துபோய்க் கூட இதைச் செய்திருக்கலாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் குடியிருக்கும் கிராமத்தைக் கூட காலி செய்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக வந்திருக்கலாம் என்று அந்த அப்பாவி மக்கள் நினைத்திருக்ககூடும் ?
அதைவிடுங்கள். கடத்திக் கொண்டு போன பின்னர் மாவோயிஸ்டுகள் என்ன கேட்கிறார்கள் ? இதோ அவர்களது கோரிக்கைகள்:

1. மல்கான்கிரியில் வாழும் பழங்குடிகள் போலவே ஒரிசா முழுவதும் சுமார் 800 பேர் எந்தவிதமான குற்றச் சாட்டுகளும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். ஒன்று - அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிந்து வழக்குத் தொடுங்கள். அல்லது - வழக்கு முடியும் வரை அவர்களை ஜாமீனில் விடுங்கள். இந்திய அரசியல் சட்டம் சொல்வதை அவர்கள் கேட்கிறார்கள்.
அமைதியாகச் சொன்னால் இந்த அதிகாரிகள் கேட்கப் போவது இல்லை என்பதால் அவர்கள் ஒரு அதிகாரியைப் பிடித்து தங்கள் மத்தியில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கக்கூடும்?

2. மாவோயிஸ்டு தலைவர் என்று குற்றம் சாட்டி வழக்கு ஏதும் இன்றி பிடித்து வைத்துள்ள பிரபலமான ஆந்திர எழுத்தாளர் சங்கத் தலைவர் ஒருவரை ஜாமீனில் விடுவிக்கச் சொல்கிறார்கள். அவர் மீது எந்த வழக்கும் இல்லை. பதியப்பட்ட 6 வழக்குகள் அனைத்தும் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி ஆகிவிட்டது. ஆனாலும், அவரை நீதிமன்றம் விடுவித்த மறு வினாடி இன்னொரு வழக்கில் போலீஸ் கைது செய்து உள்ளே வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை வெளியில் விடச் சொல்லுவதில் என்ன தவறு ?

3. ஆந்திர மாநிலத்தில் அநாதை இல்லம் நடத்திவந்த பெண் ஒருவரையும் அவரது உதவியாளர் ஒருவரையும் எந்தக் காரணமும் இல்லாமல் பிடித்து மல்கான்கிரி ஜெயிலில் வைத்திருக்கிறார்கள். ‘அந்தப் பெண்ணின் கணவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் எனவே, அவரும் மாவோயிஸ்ட்’ என்று சொல்லிக் கைது செய்து விசாரணை இல்லாமல் ஜெயிலில் வைத்திருக்கிறது ஒரிசா போலீஸ். அந்தப் பெண்ணை விடுவிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். அதுவும் ஜாமீனில்தான் விடச் சொல்லிக் கேட்கிறார்கள். அவர் நடத்தும் அநாதை விடுதி இன்னும் இருக்கிறது, அவர் எங்கும் ஓடி விடமாட்டார். இதில் என்ன தவறு. அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையைத் தான் மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள்.

4. நாராயணபட்டினம் என்ற ஊரின் அருகே இந்திய தொழில் நிறுவனமான டாட்டாவின் இரும்பு ஆலைகளுக்காகவும், சுரங்கங்கள் தோண்டவும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காலி செய்யப்பட்டுவருகிறார்கள். சில மாதங்கள் முன் அமைதியாக நடந்த ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பொழுது பலர் புல்டோசர் எந்திரம் ஏற்றியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஒரு எழுபது வயது முதியவர் வழக்கு எதுவும் இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளியில் விடச்சொல்லிக் கேட்ர்கிறார்கள். அதில் என்ன தவறு ? அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையைத் தான் கேட்கிறார்கள்.

5. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போலீசுடன் மோதல் நடந்ததாக சொல்லி இருபத்து ஐந்து பேர் இங்கே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இபாடிக் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளில்’ கைக் குழந்தைகள் முதல் நடமாட முடியாமல் படுக்கையில் கிடந்த மூதாட்டிகள் வரை அடக்கம். இந்தக் கொலைகளைப் பற்றி நியாயமான வகையில் விசாரிக்கக் கேட்கிறார்கள். எல்லாக் கொலைகளையும் விசாரிக்க வேண்டும் என்று இந்திய சட்டங்களும் நீதிமன்றங்களும் சொல்வதைத்தான் மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இதில் என்ன தவறு ?

ஆனால், இந்தியத் தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் என்ன சொல்லி வருகின்றன:
மாவோயிஸ்டுகளின் அநியாயமான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது.
அவர்களுடன் எந்த சமாதானமும் செய்து கொள்ளக் கூடாது.
அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
நியாயமான கோரிக்கைகளைக் கூட இந்திய அரசும் அதன் போலீஸ் அமைச்சர் சிதம்பரமும் கேட்கும் நிலையில் இல்லாதபொழுது பழங்குடி மக்கள் வேறு எப்படித்தான் நியாயம் கேட்பார்கள்.
அம்பானிக்காக வழக்கு என்றால் உச்ச நீதிமன்றம் கூட ராத்திரியில் கதவைத் திறந்து வைத்து விசாரிக்கும். இருபது ஆயிரம் கொலை செய்த போபால் விச வாயு வழக்கில் கம்பெனி முதலாளியான மகேந்திராவுக்கு ஒன்றரை ஆண்டு தண்டனை. வழக்கு விசாரிக்க எடுத்துக்கொண்ட இருபத்து ஐந்து ஆண்டுகள் அவர் ஜாமீனில் இருந்தார். வழக்கு முடிவில் மீண்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

உலகம் அறிந்த கொலைகாரனை சிறை வைக்க இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இல்லை. ஆனால், அதே நீதிமன்றங்கள் வழக்கேதும் இல்லாமல் ஆயிரக் கணக்கான அப்பாவிகளை ஆண்டுக் கணக்கில் சிறை வைத்தால் கூட யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இதைக் கேட்க இந்தப் பத்திரிகைகள் அல்லது தொலைக் காட்சிகளுக்கு நேரம் இருப்பதே இல்லை.

இப்போது பரிதாபம் என்னவென்றால் இப்படி ஒரு மாவட்டம் இந்தியாவில் இருப்பது கூட பல தொலைக் காட்சிகளுக்குத் தெரியவில்லை. ஒரு சினிமா நடிகர்கள் உள்ளாடை இல்லாமல் விருந்துக்குச் சென்ற விஷயம் விரிவாக விவாதிக்கப்படும் இந்த தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இப்படி ஒரு மாவட்டம் இருப்பதோ, அங்கே அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் சிறையி இருப்பதோ தெரிய நியாயம் இல்லைதான்.
இந்தக் கடத்தல் மூலம் மாவோயிஸ்டுகள் இப்படியெல்லாம் கூட இந்தியாவில் இருக்கிறது என்ற விபரங்களைக் தெரியக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

இந்த மாதம் முதல் வாரத்தில், ஐந்து போலிஸ்காரர்கள் அருகில் உள்ள சத்திஸ்கார் மாநிலத்தில் கடத்தப்பட்டபோது அரசாங்கமும் தொலைக்காட்சிகளும் அவர்களைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அக்னிவேஷ் என்ற மனித உரிமை ஆர்வலர் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியில் கொண்டு வந்தார். அந்த விபரத்தைக்கூட ஒரு தொலைக் காட்சியும் பத்திரிகையும் முறையாக வெளியிடவில்லை.
அந்த ஐந்து பேரும் மாவோயிஸ்டுகளால வெளியில் விடப்பட்ட போது மக்கள் முன்பு பேசிய உருக்கமான காட்சிகள் அடங்கிய வீடியோ படங்கள் இங்கே:


அவர்களெம்மை விடுதலை செய்தார்கள்- பிறத்தியாள்VDO
Uploaded by piraththiyaal. - Watch the latest news videos.


நூற்றுக் கணக்கான கிராம மக்கள், உள்ளூர் பத்திரிகையாளர்கள்,மனித உரிமை ஆர்வலர் அக்னிவேஷ் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் சொன்னது:
நாங்கள் பிடிபட்ட போது எங்களை மாவோயிஸ்டுகள் கொன்று விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர்களோ,
பிடிபட்ட எங்களுக்கு வேளை தவறாமல் உணவு கொடுத்தார்கள்.
மாவோயிஸ்டுத் தோழர்கள் தங்கள் சகோதரர்களைப் போல எங்களைக் கவனித்து சமமாக உட்கார்ந்து பேசி எங்களை சமாதனப் படுத்தினார்கள்.
ஒருதடவைகூட திட்டவோ வசைபாடவோ இல்லை. மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள்.

நாங்கள் ஏழைக்குடும்பங்களில் இருந்து போலீஸ் வேலைக்கு சென்று இருக்கிறோம் என்பதால் அரசாங்கம் எங்களைப் பற்றிக் கவைப்படாமல் இருந்தது. எங்களை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால், மாவோயிஸ்டுகள் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தவுடன் எங்களை விடுதலை செய்து விட்டார்கள்.

Feb 15, 2011

‘மாவோயிஸ்டுப் போரின் தளபதி’ ப.சிதம்பரம் ஒட்டுண்ணி அடுத்த பிரதமர் -பவானி-

உலகின் பிரபலமான முதலாளித்துவ பத்திரிகைகளில் முதலாவதாகக் கருதப்படும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) இந்தியாவின் அடுத்த பிரதமர் ப.சிதம்பரமாக இருக்கக் கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. கூடவே, இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அவருடைய ஒரு பேட்டியையும் வெளியிட்டு உள்ளது. ஓய்வுபெற்ற உலக வங்கிக் குமாஸ்தாவான தற்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தான் தோன்றுகிறது. மன்மோகன் சிங் உலக வங்கி நிர்பந்தத்தால் திடீர் தலைவராகி, பின்னர் பிரதமராகவும் அமர்த்தப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு தூயவர், அறிவாளி, பொருளாதார மேதை, சீர்திருத்தவாதி என்று புகழப்பட்டு தேர்தலையே சந்திக்காமல் ஒரு எம்.பி ஆன அவருடைய காலத்தில்தான் நாடு என்றுமே கண்டிராத அளவு ஊழலைக் கண்டது. ஊழல் செய்யப்பட்ட பணத்தின் அளவு சில நூறு கோடிகளில் இருந்து, பல ஆயிரம் கோடிகளாக வளர்ச்சி பெற்று அவர் பிரதமர் பணியில் இருந்து ஒய்வு பெரும் முன்பு இரண்டு லட்சம் கோடிகளாக பரிணாம வளர்ச்சியைக் கண்டது.

ஆக, இந்தியாவைச் சீர்திருத்த உலக வங்கி என்னும் கடவுள் அனுப்பிய இந்தத் வந்த தேவதூதரின் சாதனை முடிவுக்கு வருகிறது. இந்தத் திருப் பணியில் தம்மை முற்றும் இணைத்துக்கொண்டு மன்மோகன் சிங்குக்கு வலது கரமாக இருந்தவர் செட்டி நாட்டைச் சேர்ந்த சிதம்பரம். மன்மோகன் சிங்குக்கு இல்லாத ஒரு திறமை இந்தச் சிதம்பரத்திடம் உண்டு- அது கூச்சமின்றிப் பொய் பேசுவது. அவருடைய அபூர்வமான திறமைக்கு இப்போது உரிய பரிசு வழங்கும் நேரம் வந்திருக்கிறது. அதுதான் அடுத்த பிரதமர் பதவி. வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) செய்தி வெளியிடுகிறதேன்றால் அது உண்மையாக(?) இருக்கவும் வாய்ப்புண்டு.

போராடும் பழங்குடி மக்களை முன்னொருபோதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான ராணுவப் படைகளை அனுப்பி ஒடுக்கி வருவதில் ப.சிதம்பரம் காட்டி வரும் முனைப்பான நடவடிக்கைக்காக அவருக்கு வழங்கப்படும் பரிசு இந்தப் பிரதமர் பதவி என்று கொள்ளலாம். சிதம்பரம் தலைமையில் இந்திய அரசு தற்போது நடத்திவரும் பழங்குடி மக்கள் மீதான போர் உலகின் மிகவும் பின்தங்கிய பகுதியில் மிகவும் நவீனமான ராணுவத்தைக் கொண்டு நடத்தப்படும் ஒரு போர். மத்திய இந்திய மாநிலங்களில் சிதம்பரம் இறக்கிவிட்டுள்ள ராணுவம் போலீஸ் படைகளின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானம், ஈராக், மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்கா நிறுத்தியிருக்கும் படைகளின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவில் காஷ்மீர் தவிர்த்து வேறு எங்கும் இவ்வளவு படைகளை நிறுத்தி இந்திய அரசு தனது உள்நாட்டுப்போரை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சிதம்பரத்தின் ஒரு முக்கியமான சாதனை.

வடகிழக்கு இந்திய மாநிலங்களான அஸ்சாம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மற்றும் காஷ்மீர் எல்லையில் தேசிய விடுதலைப் போராளிகளை எதிர்த்து போரிட நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ராணுவப் படைகளை மீண்டும் ஒரு போலியான சமாதான நடவடிக்கை மூலம் பின்வாங்க வைத்து மத்திய இந்திய மாநிலங்களான சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், ஆந்திராவில் நிறுத்தத் திட்டமிட்டவர்களில் ப.சிதம்பரம் முக்கியமானவர். இந்திய அரசின் உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளை பல வருடங்களாக வட கிழக்கு மாநிலங்களில் நடத்திவரும் இந்தியாவின் போரைத் தலைமை தாங்கி நடத்தியவர். கடந்த அறுபது வருடங்களாக இந்திய அரசு நடத்திவரும் தேசிய இனப் ஒடுக்குமுறைப் போர் இப்போது ஒரு சமநிலையை அடைந்து விட்டபடியால் இந்திய அரசு பின்வாங்குவது தமக்கு சாதகம் என்ற வகையில் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை என்ற நாடகத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், வாபஸ் பெறப்பட்ட இந்திய ராணுவப் படைகள் மத்திய இந்திய மாநிலங்களில் வாழும் பழங்குடிமக்களின் நிலத்தைப் பிடுங்கும் போருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலாளிகளுக்கு இப்போது குறைந்த செலவில் கிடைக்கப் போகும் இரும்பு, செம்பு, நிலக்கரி, பிற கனிமப் பொருட்கள் பழங்குடியினர் வாழும் மத்திய இந்தியாவில்தான் கிடைக்க இருக்கிறது. இந்த இருவர் கூட்டணி இந்த மாநிலங்களில் இருக்கும் அரசாங்க எந்திரத்தை ரானுவமயமக்கி சிவில் அரசாங்கம் என்பதை பேச்சுக்குக் கூட இல்லாமல் ஒழிக்க செயல்பட்டு வருகின்றனர். காலனிய கால வெள்ளை அரசாங்கம் கூட பெயருக்கு ஒரு சிவில் அரசாங்கம் இருப்பதாக சொல்லிக்கொண்டு தன்னுடைய காலனியப் போரை நடத்தியது. சிதம்பரத்தின் புதிய காலனியப் போர் பெயரளவுக்குக்கூட சிவில் அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறிவருகிறது. இது புதிய காலனி ஆட்சி முறையின் ஒரு வளர்ச்சி என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் போர் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்கி நடத்தும் மிக நீண்ட ஒரு போராக இருக்கும். இஸ்ரேலின் உளவுப் பிரிவுகள், போலீஸ் படைகள் ஏற்கனவே, மத்திய இந்தியாவில் பயிற்சி அளிப்பதாகவும் ஆந்திரப் போலீஸ் பிரிவு ஏறக்குறைய இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிநடத்தலின் படி அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி வருவதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. அதற்குத் துணை செய்யும் வகையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயக உரிமைகளையும் பறித்து பினாயக் சென் போன்ற மனித உரிமை ஆர்வலர்களையும், பழங்குடி மக்களின் ஆதரவாளர்கள், காந்திய இயக்கங்களைத் தடை செய்து அனைவரையும் சிறையில் அடைத்த வகையில் சிதம்பரமும், கோபால் பிள்ளையும் அநேகமாக வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தெரிகிறது. பினாயக் சென் வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் நீதிமன்றங்கள் அவர்களின் வழிக்கு வந்து போருக்கு உறுதுணையாக இருப்பதையே காட்டுகிறது.

சிதம்பரம் ஏறக்குறைய மன்மோகன் சிங் போலவே மக்கள் ஆதரவு எதுவும் இல்லாத, ஏன் குறைந்த பட்சம் ஜாதிக்காரர்கள் ஆதரவு கூட இல்லாத ஒரு ஒட்டுண்ணி என்பது அவருக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு. இப்படிப்பட்ட ஒட்டுண்ணிகள் தான் உலக ஆதிக்க சக்திகளான உலக வங்கி சொல்லும் வழியில் நாட்டை நடத்தச் சிறந்தவர்கள் என்பது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிக நன்கு தெரியும். எனவே, இந்த ஏற்பாடு அவர்களிடைருந்து வருவதில் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. இந்திய மக்கள் சிதம்பரத்தை தமது பிரதமராக வரவேற்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) பத்திரிகைக்கு பிப்ரவரி 11 ம் தேதியன்று அவர் அளித்த இந்தப் பேட்டியில், மத்திய இந்தியாவில் தான் நடத்திவரும் ‘மாவோயிஸ்டுகளுடனான போர்’ பற்றி அவர் குறிப்பிட்ட பகுதியை இங்கே தருகிறோம்:
WSJ: மாவோயிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவது உங்கள் பணிகளில் மிகவும் முதன்மையான பணியாக இருக்கும் என்று அறிகிறோம். கடந்த ஆண்டு நீங்கள் செய்ததை ஒப்பிடும்போது இந்த 2011 ல் அப்படியென்ன வித்தியாசமாக செய்யப்போகிறீர்கள்? அல்லது புதுமையாக என்னவிதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்?
சிதம்பரம்: இன்னும் இதைப் பற்றி முழுதுமாகச் சொல்லும் நேரம் இன்னும் வரவில்லை. என்னுடைய கணிப்பில் ஒரிஸ்சா, ஜார்கண்ட் மாநிலங்களில் பல இடங்களில் அரசாங்கத்தின் கை ஓங்கியே இருக்கிறது, மேற்கு வங்க மாநிலத்தைக் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். இங்கே, சில நாட்கள் முன்பு வரை நிலைமை வேறாக இருந்தது. இந்த வினாடியில், சத்திஸ்கார் மாநிலத்தில் ஒரு தேக்க நிலை அல்லது ஒரு சம நிலை இருந்து வருகிறது என்று சொல்லலாம். ஆந்திராவில் விசாகபட்டினம் மாவட்டத்தில் மட்டும் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன, அதைத் தவிர்த்து மாநிலம் முழுதும் எங்கள் கை ஓங்கியே இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசாங்கத்துக்கு (படைகளுக்கு) சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. மொத்தத்தில் கொஞ்சம் பின்னடைவுகள், என்றாலும் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம், அதன் மூலம் நக்சல்பாரிப் படைகளை எதிர்கொண்டு வருகிறோம்.

இதன் கூடவே, அரசாங்கத்தின் வழக்கமான குழப்பம் தரும் அதிகார வர்க்க நடைமுறைகளை மாற்றியிருக்கிறோம், ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று அதிகாரிகளின் கையில் பணத்தைக் கொடுத்து ‘நீங்கள் போய் எதெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் மூன்று மாதத்திற்குள் இந்தக் கிராமங்களில் செய்து முடியுங்கள்’ என்று உத்தரவிட்டு இருக்கிறோம். இப்படி இன்றைக்கு 60 மாவட்டங்களில்,25 கோடி பணத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுத்திருக்கிறோம். அடுத்த வருடம், இந்தத் தொகை 30 கோடிக்கும் மேலாக அதிகரிக்கப்படும். இந்த மூன்று அதிகாரிகளுக்கும் அவர்கள் நினைப்பதைச் செய்ய முழுச் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறோம்.

WSJ: முறையாக நடத்தப்படும் நலத்திட்டங்கள் மூலம் இல்லாமல் இப்படி பணத்தை நேரடியாக அதிகாரிகளிடம் பிரித்துக் கொடுப்பது ஒரு புது முயற்சி – அப்படித்தானே?
சிதம்பரம்: கடந்த காலத்தில் பல கமிட்டிகள் தீட்டிக் கொடுத்த வண்ணமயமான திட்டங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே, இந்த ஆண்டிலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 கோடி ரூபாய் பணத்தை நேரடியாக மூன்றே மூன்று அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறோம். இந்த அதிகாரிகள், மாவட்டத்தின் மூத்த IAS அதிகாரியான–மாவட்டக் கலெக்டர், மூத்த போலீஸ் அதிகாரியான மாவட்டக் காவல் அதிகாரி (S.P), மூத்த வன அதிகாரியான மாவட்ட வன அலுவலர் (DFO). அவர்களிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம்: ‘நீங்கள் மூன்று பெரும் என்ன நினைக்கிறீர்களோ அதைச் செய்யலாம்’.

WSJ: தொழில் நிறுவனங்கள் பழங்குடி மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிவருவதாகப் பலர் பயப்படுத்தி வருவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
சிதம்பரம்: இதெல்லாம் மிகவும் கடினமான விஷயங்கள். பல ஊர்களில் நிலம் கிராமம் முழுமைக்கும் பொதுவானது. இன்னும் பல இடங்களில், அரசாங்கத்திற்குச் சொந்தமானது ஆனால், பழங்குடிகள் அதை ஆக்கிரமிப்புச் செய்திருக்கிறார்கள். கனிமப் பொருட்கள் அந்த நிலங்களில் தான் இருக்கின்றன. அந்த கனிமங்களைத் தோண்டவேண்டுமானால், காடுகளை வெட்டித்தான் ஆக வேண்டும், காடுகளை வெட்ட வேண்டுமானால், பழங்குடி மக்களை வெளியேற்றத்தான் வேண்டும். அவர்களுக்கு வேறு பிழைப்புத் தரலாம். மீண்டும் காடுகளை மறுபடி உருவாக்கலாம். இது மிகவும் சிக்கலான விசயம். என்னுடைய கருத்துப்படி, எதெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்து இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கனிமங்கள் மூலமாக நல்ல மதிப்புக் (பணம்) கிடைக்க வேண்டுமென்றால் அதைத் தோண்டித்தான் ஆகவேண்டும். கனிமங்களெல்லாம் இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் பூமிக்குள்ளேயே புதைந்து கிடக்கும் என்றால் அதனால் யாருக்கும் பலன் இல்லை.
----------------------------------------------------------------

ஊழலைத் தாராளமயம் ஆக்கியவர் சிதம்பரம் !!
தாராளமயம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகள் நாட்டைக் கொள்ளையிடுவதை சிறப்பாக செயல்படுத்தியவர்களில் முக்கியமானவர் சிதம்பரம். சிதம்பரம் சட்டத்திலும், நிதி நிர்வாகத்திலும் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ பல்கலைக் கழகத்திலும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்றவர். அவர் பணியாற்றிய என்ரான் (Enran), வேதாந்தா (Vedantha) , போன்ற கம்பெனிகள் உலகின் மிகப் பெரும் ஊழல் கம்பெனிகள். அந்தக் கம்பெனிகள் செய்த ஊழல்கள் ஏறக்குறைய மாயாஜால கண்கட்டி வித்தைகளுக்கு ஒப்பானவை, ஊழலில் அவை எட்டிய வரம்பு இதுவரை எட்டப்படாத அளவில் மிகப் பெரியவை. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்தக் கம்பெனிகள் மக்கள் பணத்தை சுருட்டி அதன் தலைமை அதிகாரி உட்பட பல முக்கிய அதிகாரிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். என்ரான் கம்பெனி ஊழலில் சிக்கும் வரை உலகின் மிகவும் முன் மாதிரியான, நல்ல மனிதப் பண்புகள், விழுமியங்கள் உடைய ஒரு கம்பெனியாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஒரே நாளில் இந்தக் கம்பெனி திவால் ஆகி பல ஆயிரம் கோடிப் பணம் காணாமல் போய் முதலீடு செய்திருந்த பலர் அதிலும் முக்கியமாக அமெரிக்கர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். விசாரனையின் பொழுது தெரிந்தது என்னவென்றால் - என்ரான் தொடக்கம் முதல் இறுதி வரை மோசடி செய்வதற்காகவே ஒரு திறம் படைத்த நல்ல பல்கலைக் கழகங்களில் படித்த சிதம்பரம் போன்ற ஆசாமிகளை வேலைக்கு வைத்து இருந்திருக்கிறது. ஆனாலும், இதற்காக வேலை செய்த சிதம்பரம் சிக்கவில்லை. அதுமட்டும் அல்ல சிதம்பரம் இது வரை ஒரு ஊழலில் கூட நேரடியாக சிக்கி எந்த வழக்கிலும் மாட்டிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு திறமையானவர் !!

இப்போது ஊழலைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல சிதம்பரம் வகுத்த திட்டங்களில் ஒன்று தான் இந்த சிறப்புத் திட்டம். ‘மாவோயிஸ்ட் போர்’ நடக்கும் மாநிலங்களிலெல்லாம் ஏற்கனவே, பழங்குடியின மேம்பாட்டுக்கு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகிறது, ஏற்கனவே, பணத்தில் மிதந்து வரும் இந்த மாவட்டங்களில்- தலைமை அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் இந்தப் பணம் அதிலும் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் (District Magistrate), மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் (S.P),மாவட்ட வன அதிகாரி (District Forest Officer) ஆகிய இந்த மூன்று பேருக்கும் லாட்டரியில் ஜாக்பாட் விழுந்த மாதிரிதான். 25 கோடி ரூபாய் பணத்தை இந்த மூன்று அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் செலவிடவேண்டும். என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. வழக்கமான மாவட்ட நடைமுறைகளை அதாவது– பெயரளவுக்குகூட யாருக்கும் இவர்கள் பதில் சொல்லவோ, பணத்திற்குக் கணக்கு வைக்கவோ தேவையில்லை. எவரிடமும் சொல்லாமல் சுருட்டிக் கொள்ள ஒரு அரியவாய்ப்பு. இந்த மாவட்டங்களில் பணத்தை மாற்றுவதற்குக் கூட வங்கிகள் இல்லை, ஜீப் கார்கள் ஓடுவதற்கு ரோடுகள் இல்லை, மருத்துவ மனைகள் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்பதை புரிந்து கொண்டால் சிதம்பரம் வகுத்துக் கொடுத்திருக்கும் இந்தக் கொள்ளையிடும் பணியைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
பழங்குடியினரின் நிலத்தை பிடுங்கும் இந்தப் போரில் பலன் அடையப் போவது வேதாந்தா போன்ற கம்பெனிகள் தான். வேதாந்தா கம்பெனியின் டைரக்டர் பதவி மூலம் பல கோடி பங்குகள் சிதம்பரத்திற்கு கிடைக்கும்போது நேரடியாகப் போரை நடத்தும் கூலிப்படைகளின் தலைவர்களான மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி போன்றவர்களுக்கு வருடம் 25 கோடி தருவது ஒரு அவசியம் தான். அவர்கள் எளிதாக ஊழல் செய்ய அவர்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு.

பழங்குடியினருடன் போர் என்பது கனிமங்களுக்காகத்தான்
‘பழங்குடியினருடன் நடக்கும் போர் என்பது கனிமங்களுக்காகத்தான் நடக்கிறது’ என்ற விஷயம் இந்தப் பேட்டியைப் படிப்போருக்கு வெளிப்படையாகவே தெரியும். ‘மாவோயிஸ்டுகளுடன் போர் ! நக்சல்பாரிகளுடன் போர் ! பயங்கரவாதிகளுடன் போர் !’ என்று பல பூதங்களைக்காட்டி அனைவரையும் வழிக்குக் கொண்டு வந்து விட்டபின் அவரது முயற்சி ஏறக்குறைய வெற்றியும் பெற்று விட்டது. இப்போது பத்திரிகைகள், நீதிமன்றங்கள், அறிவாளிகள் அனைவரும் சிதம்பரத்தின் போரை ‘பழங்குடி மக்களின் நிலத்திற்கான போர்’ என்று சொல்வது இல்லை – மாறாக ‘மாவோயிஸ்டுகளுடன் போர்’ என்று தான் சொல்கிறார்கள்.

இதே போல சிதம்பரத்தின் திட்டங்களில் ஒன்று போரில் சாகும் ராணுவம், போலிஸ்காரர்களுக்கு சன்மானத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பது. இந்திய ராணுவ வீரர் எல்லையில் போரிட்டுச் செத்தால் கிடைப்பது ரூபாய் பத்து லட்சம். ஆனால், மாவோயிஸ்டுகளுடன் போரிட்டுச் செத்தால் கிடைப்பது 70 லட்சம். மாவட்டக் கலெக்டர்கள் தொடங்கி அப்பாவி போலீஸ் ராணுவ வீரர்கள் வரை சிதம்பரம் வகுத்துள்ள சிறப்பு பரிசுத் திட்டம் அவரது மூளையில் உதித்ததுதான்.

வருக சிதம்பரம் வருக !!